திரைத் துளிகள்

 தாம் யாரையும் காதலிக்க வில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், ஒரு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்ற விரும்புவதாகக் கூறியுள்ளார் மஞ்சிமா மோகன்.

'எஃப்.ஐ.ஆர்' படத்தை இயக்கியுள்ள மனு ஆனந்த் தமது அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கி உள்ளார். இதில் தம்முடன் இணைந்து பணியாற்ற விரும்பும் உதவி இயக்குநர்கள் அணுகலாம் என சமூக ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், அந்தப் படத்தில் தாமும் உதவி இயக்குநராகப் பணியாற்ற விரும்பி விண்ணப்பித்ததாகக் குறிப்பிட்டுள்ள மஞ்சிமா, தமது விண்ணப்பத்தை மனு ஆனந்த் நிராகரித்து விட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட மனு ஆனந்த், மஞ்சிமாவின் விண்ணப்பம் தம்மை வந்தடையவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து மஞ்சிமா அவரிடம் உதவி இயக்குநராகச் சேருவார் எனத் தெரிகிறது.

 ரஜினிக்குள் மிகச்சிறந்த கதாசிரியர் இருப்பதாக பாராட்டி உள்ளார் இளையராஜா.

சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பேசிய அவர், தமது நண்பர் எஸ்.பி.பாலசுப்பிர மணியம் மேடையில் இல்லாததது வருத்தம் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

"ரஜினியை ஒரு நடிகராக நான் பார்த்திருக்கிறேன். ஆனால் 'வள்ளி' படத்தின் கதையை விவரித்தபோதுதான் அவருக்குள் ஒரு சிறந்த திரைக்கதாசிரியர் இருந்ததை தெரிந்துகொண்டேன். அந்தப் படத்தில் இடம்பெற்ற என்னுள்ளே பாடலைக் கேட்டு ரசிகர்கள் இன்றளவும் கைதட்டுகிறார்கள் எனில், அன்று ரஜினி அந்தக் கதையை அழகாக விளக்கியதுதான் காரணம்," என்றார் இளையராஜா.

மேலும், அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகர் தனுஷை நோக்கி, "இந்தப் பாடல் இவ்வளவு அழகாக வர உங்கள் மாமனார்தான் காரணம்," என்றும் கூறினார். அதைக்கேட்டு ரசிகர்கள் கரவொலி எழுப்பினர்.

 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் முதல் வார வசூல் நூறு கோடி ரூபாயைக் கடந்துள்ளது. இந்நிலையில் தனது குழந்தைகளுடன் அப்படத்தைக் கண்டு ரசித்ததாகக் கூறியுள்ளார் சூர்யா. மேலும், தனது குழந்தைகளை அந்தப் படம் கவர்ந்துள்ளது என்றும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். "எனது மகளுக்கு 14 வயதும் மகனுக்கு 11 வயதும் ஆகிறது. அவர்களுடன் அமர்ந்து அந்தப் படத்தை பார்க்க முடிந்தது. பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து அலசும் படம் என் குழந்தைகளுக்குப் புரிந்தது என்பதும் அதன் மூலம் அவர்கள் சிலவற்றைக் கற்றுக்கொள்ள முடிந்தது என்பதும் மனநிறைவு தருகிறது. குழந்தைகள், அனிமேஷன், கேலிச்சித்திரப் படங்களை மட்டுமல்லாமல், சமூகப் பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களையும் பார்க்க வேண்டும்," என்கிறார் சூர்யா.

 இன்ஸ்டகிராமில் அதிகமானோர் பின்தொடரும் தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் அல்லு அர்ஜுன் முதல் இடத்தில் உள்ளார். அவரை 17.5 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இரண்டாம் இடத்தில் உள்ள தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை 14.7 மில்லியன் பேர் பின்தொடர்வது தெரிய வந்துள்ளது. மலையாள நடிகர் துல்கர் சல்மானை 10.1 மில்லியன் பேர் பின்தொடரும் நிலையில் அவர் மூன்றாம் இடத்திலும் பிரபாஸ் 8.1 மில்லியன் பேருடன் நான்காம் இடத்திலும் உள்ளனர். தமிழ் நடிகர்களில் 6.6 மில்லியன் பேர் பின்தொடரும் சிம்பு முதல் இடத்தில் உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!