'திருச்சிற்றம்பலம்' படம் குறித்த எதிர்பார்ப்பு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதை மித்ரன் இயக்கி உள்ளார்.
அவர் இதற்கு முன்பு தனுஷை வைத்து இயக்கிய 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' ஆகிய படங்கள் வசூல் ரீதியில் வெற்றிபெற்றுள்ளன.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் என இப்படத்தில் மூன்று நாயகிகள் உள்ளனர். பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். வணிகப் படமாக உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாகிறது.
'அசுரன்' படத்துக்குப் பிறகு தனுஷுக்கு விருதும் வெற்றியும் கிடைத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'பட்டாஸ்', 'ஜெகமே தந்திரம்', 'மாறன்', இந்தியில் நடித்த 'அந்தராங்கி ரே' ஆகிய படங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை.

