ஊழல் குறித்து அலசும் புதிய படம் 'பேட்டரி'

ஊழல் குறித்து அலசும் புதிய படம் 'பேட்டரி'

1 mins read
a72af8d6-5a86-44af-a51c-a94e8a432816
'பேட்டரி' படத்தில் செங்குட்டுவன், அம்மு அபிராமி. -

உண்­மைச் சம்­ப­வங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு உரு­வாகி வரு­கிறது பேட்­டரி படம். மணி­பா­ரதி இயக்கி உள்­ளார்.

மருத்­து­வக் கரு­வி­களை வாங்­கு­வ­தில் நடக்­கும் முறை­கே­டு­கள் குறித்து இந்­தப் படத்­தில் விவ­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாம்.

"இந்­திய மக்­கள் தொகை­யில் மூன்­றில் இரண்டு பங்கு பேர் ஏழை­க­ளாக உள்­ள­னர். வறுமை கோட்­டிற்­குக் கீழ் வாழும் அந்த மக்­க­ளுக்கு மருத்­து­வச் செலவு என்­பது பெரும் சுமை­யா­கவே இருக்­கும்.

"இந்­நி­லை­யில் மருத்­து­வக் கரு­வி­கள் தொடர்­பாக நடக்­கும் முறை­கே­டு­கள் கார­ண­மாக ஓர் ஏழைக் குடும்­பம் எந்த அள­வுக்கு பாதிக்­கப்­ப­டு­கிறது என்­பதை நெஞ்­சம் பதை­ப­தைக்க சொல்­லும் படம் இது.

"காவல்­துறை ஆய்­வா­ள­ரான நாய­கன் செங்­குட்­டு­வனை, நாயகி அம்மு அபி­ராமி காதலிக்­கி­றார். ஆனால், ஒரு கொலை வழக்­கில் குற்­ற­வா­ளி­யைத் தேடிக்­கொண்­டி­ருக்­கும் செங்­குட்­டு­வன், அதன் தீவி­ரத்­தால் காதலை ஏற்­றுக் கொள்ள மறுத்து விடு­கி­றார். காதல், குற்­றச்­செ­யல்­களை சரி­வி­கி­தத்­தில் கலந்து திரைக்­கதை அமைக்­கப்­பட்­டுள்­ளது," என்­கி­றார் மணி­பா­ரதி.