திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
96e173d4-c902-4c37-9922-a7d1b169f44d
-
multi-img1 of 3

 'அண்மைக்காலமாக தென்னிந்திய கதாநாயகிகள் சண்டைக் காட்சிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களில் சமந்தாவும் ஒருவர். 'ஃபேமிலிமேன் 2' இணையத் தொடரில் அவர் சில சண்டைக் காட்சிகளில் நடித்திருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், ஐந்து மொழிகளில் தயாராகும் 'யசோதா' என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் சமந்தா. இதில் நிறைய சண்டைக்காட்சிகள் உள்ளன. அந்தக் காட்சிகளை மேற்பார்வையிட்டு, சமந்தாவுக்குப் பயிற்சியும் அளிக்க ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரான யானிக் பென் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தனக்காக செய்யப்பட்டுள்ள இந்தச் சிறப்பு ஏற்பாடு சமந்தாவுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது. யானிக் பென்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயத்துக்காக ஸ்பெயின் நாட்டில் சிகிச்சை பெற உள்ளார் 'பாகுபலி' பிரபாஸ். அநேகமாக அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறும்

எனக் கூறப்படுகிறது.

'சலார்' தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பிரபாசுக்கு எதிர்பாராத விதமாக அடிபட்டது. காயம் காரணமாக சில நாள்கள் ஓய்வில் இருந்தார் பிரபாஸ். ஆனால் ஓய்வுக்குப் பிறகும் அடிபட்ட இடத்தில் வலி குறையவில்லை. இதனால் அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் ஒரே தீர்வு என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனராம். இதையடுத்து நேற்று முன்தினம் அவர் ஸ்பெயின் புறப்பட்டுச் சென்றார்.

 'சுமார் ஐந்து ஆண்டு களுக்குப் பிறகு 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு' என்ற மலையாளப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பாவனா.

இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற அனைத்துலக திரைப்பட விழாவில் அவர் கலந்துகொண்டார். அழைப்பிதழில் அவரது பெயர் இடம்பெறவில்லை. விழா நடைபெற்ற அரங்கில் அவர் நுழைந்ததும், "போராட்டத்தின் இன்னொரு பெண் வடிவமான பாவனாவை மேடைக்கு அழைக்கிறோம்," என்றார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். இதையடுத்து மேடையிலும் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர்.விழாவில் பேசிய கேரள கலாசாரத்துறையின் அமைச்சர் ஷாஜி செரியன், "கேரள மக்களுக்கு பாவனா ஒரு முன்மாதிரி," என்று குறிப்பிட்டார். இது தொடர்பான காணொளிப்பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

 வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் 'வாடிவாசல்'. ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் தந்தை, மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார் சூர்யா. இந்நிலை யில், படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதனால் இயக்குநர் வெற்றிமாறனும் படக்குழுவினரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனராம். இதையடுத்து, படப்பிடிப்பில் பங்கேற்கும் தொழிலாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், துணை நடிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகத் தகவல்.