நடிகர் சங்கத் தேர்தலில் இரண்டு ஆண்டுகளாக நடத்திய சட்டப் போராட்டத்துக்குப் பிறகு வெற்றி கிடைத்துள்ளதாக பாண்டவர் அணியைச் சேர்ந்த நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும் கே.பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பாண்டவர் அணித் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் என பெரும்பாலான பதவிகளைக் கைப்பற்றியது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, தேர்தல் வெற்றியானது பாண்டவர் அணியின் கடந்தகால செயல்பாடுகளுக்கான அங்கீகாரம் என்றார்.
"விரைவில் பதவியேற்போம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடம் கட்டி முடிக்கப்படும். நாங்கள் முன்பே அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்," என்றார் கார்த்தி.
தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
, :

