'என் கனவு நிறைவேறியது'

'என் கனவு நிறைவேறியது'

3 mins read
42cb8454-11e7-4987-9246-41adb9b06d25
-

பன்­னீர்­செல்­வம் இயக்­கி­யுள்ள 'தீக்­குள் விரலை விட்­டாய்' படத்­தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் தீப்ஷிகா. இதை­ய­டுத்து விக்­ரம் பிர­பு­வு­டன் புதுப்­ப­டம் ஒன்­றில் இணைந்­துள்­ளார்.

தீப்­ஷிகா திரைத்­து­றை­யில் அறி­மு­க­மாகி இரண்டு ஆண்­டு­கள் ஆகின்­றன. குறு­கிய காலத்­துக்­குள் தமி­ழி­லும் தெலுங்­கி­லும் தலா மூன்று படங்­களில் நடித்­து­விட்­டா­ராம்.

இந்த இளம் நாய­கி­யின் சொந்த ஊர் சென்னை. பிறந்­தது வளர்ந்­தது எல்­லாம் சென்னை­யில்­தான். இளங்­கலை பட்­டப்­ப­டிப்பை முடித்த கையோடு சினிமா துறைக்கு வந்­து­விட்­டார். தீப்­ஷி­கா­வின் தந்தை தொழி­ல­தி­பர். சிறு வயது முதலே தொலைக்­காட்சி நிகழ்ச்­சித் தொகுப்­பா­ள­ராக வேண்­டும் என்­ப­து­தான் இவ­ரது ஆசை. பெற்­றோர் இதற்கு தடை­ வி­திக்­க­வில்லை. மாறாக இரு­வ­ரும் மகளை ஊக்­கப்­ப­டுத்தி உள்­ள­னர்.

கல்­லூ­ரி­யில் படித்­துக்கொண்­டி­ருந்­த­போது, 'ரேனி­குண்டா', 'கருப்­பன்' உள்­ளிட்ட படங்­களை இயக்கி உள்ள இயக்­கு­நர் பன்னீர்­செல்­வம் தனது படத்­துக்கு புது கதா­நா­ய­கி­யைத் தேடு­வ­தா­கக் கேள்­விப்­பட்­டா­ராம் தீப்­ஷிகா. சும்மா முயற்சி செய்­வோம் என்று முடி­வெ­டுத்து, நாய­கிக்­கான நேர்­மு­கத் தேர்­வுக்­குச் சென்­றுள்­ளார்.

"நூற்­றுக்­கும் அதி­க­மான இளம்­பெண்­கள் அந்த தேர்­வுக்கு வந்­தி­ருந்­த­னர். என்­னை­விட அழ­கான பெண்­களும் இருந்­த­னர். ஆனால், இயக்­கு­நர் பன்­னீர்­செல்­வம், 'உனக்கு நடிக்­க­வும் தெரி­கிறது. அத­னால் நீதான் எனது படத்­தின் நாயகி' என்று சொல்லி என்னைத் தேர்ந்­தெ­டுத்­தார்.

"நாற்­பதே நாள்­களில் மொத்­தப் படப்­பி­டிப்­பும் நடந்து முடிந்­தது. அவ­ரு­டைய மகன் அருண் தான் நாய­கன். அருண் இதற்கு முன் 'ஐஸ்­வர்யா முரு­கன்' என்ற படத்­தில் நடித்து முடித்­துள்­ளார். 'தீக்குள் விரலை விட்­டாய்' அவ­ருக்கு இரண்­டா­வது படம்," என்று சொல்­லும் தீப்­ஷிகா, விக்­ரம் பிர­பு­வு­டன் நடித்­தது நல்ல அனு­ப­வ­மாக இருந்­தது என்­கி­றார்.

காலஞ்­சென்ற சிவாஜி கணே­ச­னின் பேரன், பிர­பு­வின் மகன் என்­கிற பந்தா ஏதும் இல்­லா­மல் மிக­வும் எளி­மை­யா­கப் பேசிப் பழ­கு­கி­றா­ராம் விக்­ரம் பிரபு.

"முதல்­நாள் படப்­பி­டிப்­பில் என்னை அவ­ரி­டம் அறி­மு­கப்­படுத்தி­ய­போது, "கன­வுத்­தொ­ழிற்­சாலைக்கு வருக," என்று குறிப்­பிட்டு வர­வேற்­றார். பின்­னர் என் நடிப்­பைப் பார்த்­து­விட்டு, "நல்ல திற­மை­யு­டன் இருக்­கி­றீர்­கள், வாழ்த்­து­கள். இந்­தப் படத்­தில் உங்­க­ளு­டைய கதா­பாத்­தி­ரம்­தான் திடீர் திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்­தும். இயக்கு­நர் இது­கு­றித்து ஏதும் சொன்­னாரா? என்று அக்­க­றை­யுடன் விசா­ரித்­தார். இன்­னொரு கதா­பாத்­தி­ரத்­துக்கு அளிக்­கப்­படும் முக்­கி­யத்­து­வத்தை அப்­ப­டத்­தின் கதா­நா­ய­கனே இப்­ப­டிக் குறிப்­பிட பெரிய மனது வேண்­டும்," என்று விக்­ரம் பிர­பு­வைப் பாராட்­டு­கி­றார் தீப்­ஷிகா.

"இது­வரை நடந்­துள்ள அனைத்­துக்­கும் சேர்த்து கடவுளுக்­குத்­தான் நன்றி சொல்ல வேண்­டும். சினி­மாவை சிறு வயது முதல் நேசித்து இந்­தத் துறைக்கு வந்­தி­ருக்­கி­றேன். அத­னால்­தானோ என்­னவோ, அடுத்­த­டுத்து என்னை படங்­க­ளுக்கு பரிந்­துரை செய்­கி­றார்­கள். என்­னைப் பரிந்­துரை செய்­த­வர்­க­ளின் நம்­பிக்­கை­யைக் காப்­பாற்­றும் வித­மாக கடந்த ஒன்­றைரை ஆண்­டு­களில் ஐந்து படங்­களில் நடித்து முடித்­து­விட்­டேன்.

"விக்­ரம் பிரபு படம் முடி­வ­டைந்­த­தும், பிர­பல தெலுங்கு நாய­கன் நவீன் சந்­தி­ரா­வுக்கு ஜோடி­யாக 'தேஜா­வுய்' என்­கிற தெலுங்­குப் படத்­தில் நடித்து முடித்­து­விட்­டேன். அர­விந்த் சீனி­வா­சன் இயக்­கி­ இ­ருக்­கி­றார்.

"இந்­தப்படம் விரை­வில் வெளி­யாக இருக்­கிறது. இதை­யடுத்து ரவி­தேஜா தயா­ரிப்­பி­லும் மற்­றொரு பெரிய தெலுங்­குப் பட நிறு­வ­னத்­துக்­கும் ஒப்­பந்­த­மாகி, இரண்டு படங்­க­ளி­லும் தற்­போது நடித்­துக்கொண்­டி­ருக்­கி­றேன்.

"மூன்­றா­வது தமிழ்ப் படத்தி­லும் ஒப்­பந்­த­மாகி உள்­ளேன்," என்று உற்­சா­கத்துள்­ள­லு­டன் பேசும் தீப்­ஷிகா, கவி­ஞர் வைர­முத்­து­வின் 'நாட்­படு தேறல்' இசைத் தொகுப்­பில் இடம்­பெற்­றுள்ள ஒரு பாட­லி­லும் நடித்­துள்­ளார்.

"அந்த இசைத்­தொ­குப்­பில் இடம்­பெ­றும் 'கேசா­தி­பா­தம்' என்­கிற பாட­லில் நடன ஆசி­ரி­யை­யாக நான் நடித்­துள்­ளேன். ஒரு பெண்ணின் தலை­ மு­தல் பாதம் வரை அவளது அவ­யங்­களை ஒவ்­வொன்­றாக இயற்­கை­யு­டன் ஒப்­பிட்டு வர்­ணித்து இந்த பாடலை எழு­தி­யுள்­ளார் வைர­முத்து.

"படப்­பி­டிப்பு முடி­வ­டைந்த சில நாள்­க­ளுக்­குப் பின்­னர் அவரே தொடர்­பு­கொண்டு பேசி, 'உங்­கள் நடிப்­பும் நடனமும் அந்­தப் பாட­லுக்கு உயிர்­கொ­டுத்துவிட்­டதம்மா... வாழ்த்­து­கள்' என்று வாழ்த்தி­யதை வாழ்­நாள் முழு­தும் மறக்­கவே இய­லாது," என்­கி­றார் தீப்­ஷிகா.