வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் 'வாடிவாசல்' படத்துக்கான ஒத்திகை நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் 'வாடிவாசல்' திறக்க தாம் ஆவலுடன் காத்திருப்பதாக அதில் நடிக்கும் சூரி தெரி வித்துள்ளார்.
"ஆயிரமாயிரம் ஆண்டு களாக வீரம் விளைஞ்ச நம் மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்தக் காவியம்," என்று தமது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பட ஒத்திகையின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். "அண்ணன் வெற்றிமாறன், அண்ணன் சூர்யா மிரட்டும் இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும்," என்கிறார் சூரி.
சிவகார்த்திகேயனின் இருபதாவது படமான 'எஸ்.கே.20' படத்தின் கதாநாயகி யார் என்பது தெரிய வந்துள்ளது.
உக்ரேனைச் சேர்ந்த மாடல் அழகியும் நடிகையுமான மரியா ரியாபோஷாப்காவை தான் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இவர் ஓடிடி தளத்தில் வெளியீடு கண்ட 'ஸ்பெஷல் ஆப்ஸ்' என்ற இந்தி இணையத் தொடரில் நடித்தவர்.
மரியா ஒப்பந்தமாகி உள்ளதை தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சிவா, மரியாவை தமிழ்த் திரையுலகத்திற்கு வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தன் ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் அருண் விஜய்.
அண்மையில் சென்னை மாவட்டத்தில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்களில் ஒருவருக்குப் பிறந்தநாள் என்பது மன்ற நிர்வாகி மூலம் அவருக்குத் தெரிய வந்திருக்கிறது.
இதையடுத்து அந்த ரசிகருக்குத் தெரியாமல் பிறந்தநாள் கேக் வரவழைத்துள்ளார். பின்னர் மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் அந்த ரசிகரை கேக் வெட்ட வைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறினாராம்.
அந்த ரசிகர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப்போக, ரசிகர்கள் மீதான அருண் விஜய்யின் அன்பை சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
ரஜினி மகள் ஐஸ்வர்யா முதன்முறையாக இந்திப் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்துக்கு 'ஓ சாதிசால்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் முதல் தோற்றச் சுவரொட்டியை வெளி யிட்டுள்ள ஐஸ்வர்யா, படத்துக்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கிவிட்ட தாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தமது சமூக
ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடைசியாக கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த் இணைந்து நடித்த 'வை ராஜா வை' என்ற படத்தை இயக்கி இருந்தார் ஐஸ்வர்யா. அண்மையில் 'பயணி' என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டிருந்தார்.

