திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read

 அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள 'அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு' திரைப்படம் நாளை இணையத்தில் நேரடியாக வெளியாகிறது. இதில் அச்சமும் அப்பாவித்தனமும் கொண்ட 19 வயது இளம்பெண்ணாக நடித்துள்ளார் அக்‌ஷரா. "இந்தப் படத்தில் நான் ஏற்றுள்ள கதாபாத்திரம் எனது நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. படம் பார்க்கும் இளம்பெண்கள் தங்களை இந்தக் கதாபாத்திரத்துடன் எளிதில் பொருத்திக் கொள்ள இயலும். எனக்குள் இருக்கும் இளம்பெண்ணுக்கே உரிய இயல்பான குணாதிசயங்கள் இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது," என்கிறார் அக்‌ஷரா ஹாசன்.

ராகா ராமமூர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் உஷா உதுப், மால்குடி சுபா, அஞ்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

 பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான 'ராதே ஷியாம்' படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் படத்தின் வசூலும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை எனத் தகவல். படத்தின் தயாரிப்பாளருக்கு நூறு கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டம் என்று சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தயாரிப்பாளரின் சுமையைக் குறைக்கும் விதமாக, தனது சம்பளத்தில் இருந்து ரூ.50 கோடியை விட்டுக் கொடுத்துள்ளாராம் பிரபாஸ். இந்தப் படத்துக்காக அவர் வாங்கிய சம்பளம் நூறு கோடி ரூபாயாம்.

 பள்ளி, கல்லூரி நாள்களில் தமக்கு அழகான ஆண்களைப் பார்க்கும்போது ஈர்ப்பு ஏற்பட்டதாகச் சொல்கிறார் நடிகை டாப்சி. அழகான இளையர்கள் தன்னைக் காதலிப்பதுபோல் நினைத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார். "ஆனால் யாரையும் நெருங்கிச்சென்று, நான் உன்னைக் காதலிக்கி றேன் என்று ஒருமுறை கூட சொன்னதில்லை. கல்லூரி யில் ஒரு பையனுடன் ஓரளவு வெளிப்படையாகப் பேசிப்பழகினேன். ஆனால் திடீரென ஒருநாள் திருமணம், குழந்தை, குடும்பப்பொறுப்புகள் என்று அவன் பேசத் தொடங்கியதும் பயந்துவிட்டேன். அதன் பிறகு அவனுடன் பேசுவதை தவிர்த்துவிட்டேன்," என்று டாப்சி தெரிவித்துள்ளார்.