'தர்மதுரை' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'.
இதை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். எம்.சுகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜாவும் யுவனும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்நிலையில், 'மாமனிதன்' படம் மே 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சில சிக்கல்கள் காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

