'ஓர் இளையராஜா, ஒரு பாரதிராஜாதான்'

'ஓர் இளையராஜா, ஒரு பாரதிராஜாதான்'

2 mins read
f5ecf18d-745f-4551-883b-a5283701a7e3
'காதல் செய்' பட விழாவில் இளையராஜா, பாரதிராஜா. -

கு.கணே­சன் இயக்­கி­யுள்ள 'காதல் செய்' படத்­துக்கு தணிக்­கைக் குழு­வி­னர் சான்­றி­தழ் அளிக்க மறுத்து­விட்­ட­னர்.

இதை­ய­டுத்து சட்­டப் போராட்­டத்தை தொடங்க இருப்­ப­தாக அவர் அறி­வித்­துள்­ளார்.

இது கணே­ச­னின் இரண்­டா­வது படம். இதற்கு முன்பு இலங்­கை­யில் நடந்த இறு­திப்­போ­ரில் கொல்­லப்­பட்ட தொலைக்­காட்சி தொகுப்­பா­ளினி இசைப்­ரி­யா­வின் வாழ்க்­கையை 'போர்க்­க­ளத்­தில் ஒரு பூ' என்ற பெய­ரில் இயக்கி இருந்­தார் கணே­சன்.

அதை இந்­தி­யா­வில் வெளி­யிடத் தடை­வி­திக்­கப்­பட்­டது. பெரும் போராட்­டத்­துக்­குப் பிறகு அது வெளி­யீடு கண்­டது.

"அந்­தப் படத்­திற்கு பிரச்சினை செய்த அதே தணிக்­கைக் குழு­வினர்­தான் இப்­போது 'காதல் செய்' படத்­தை­யும் பார்த்­த­னர். 'போர்க்­களத்­தில் ஒரு பூ' பட வெளி­யீட்டு நேரத்­தில் நடந்த பிரச்­சினை­களை மன­தில் வைத்­துக்கொண்டு 'காதல் செய்' படத்­தை­யும் வெளி­யி­டக்­கூ­டாது என்று தடை போட்டி­ருக்­கி­றார்­கள். இது முழுக்க முழுக்க காதல் படம். இந்த பிரச்சி­னையை நான் சட்ட ரீதி­யாக சந்­திப்­பேன்," என்­கி­றார்.

இதற்­கி­டையே இந்­தப் படத்­தின் முன்­னோட்டக் காட்­சித் தொகுப்பு வெளி­யீட்டு விழா­வில் இளை­ய­ராஜா­வின் நகைச்­சுவை பேச்சு அனை­வ­ரை­யும் பெரி­தும் கவர்ந்­துள்­ளது.

"எதிர்­கால பார­தி­ரா­ஜாக்­களே... நிகழ்­கால பி.வாசுக்­களே... எதிர்­கால இளை­ய­ரா­ஜாக்­களே..." என்று பேசத் தொடங்­கிய அவர், பிறகு லேசாக சிரித்­த­ப­டியே, "கால­காலத்­துக்­கும் பார­தி­ரா­ஜாக்­கள், இளை­ய­ரா­ஜாக்­கள் புதிது புதி­தாக வரு­வார்­களா? கிடை­யவே கிடை­யாது. ஒரே ஒரு பார­தி­ரா­ஜா­தான். ஒரே ஒரு பி.வாசு­தான். ஒரே ஒரு இளை­ய­ரா­ஜா­தான்.

"ஒரு சூரி­யன் மாதிரி இன்­னொரு சூரி­யன் உல­கத்­தில் தோன்ற வாய்ப்­புள்­ளதா, இல்லை," என்­றார் இளை­ய­ராஜா.

ஒரு படத்தை தயா­ரிக்க தயா­ரிப்­பா­ள­ரும் இயக்­கு­ந­ரும் எவ்­வ­ளவு சிர­மப்­பட்­டா­லும் பர­வா­யில்லை எனக் குறிப்­பிட்ட அவர், படம் பார்க்­கும் ரசி­கர்­க­ளுக்­குத்­தான் அத­னால் கஷ்­டம் வரக்­கூ­டாது என்­றார்.

இதைக்­கேட்டு இந்­நி­கழ்ச்­சியில் கலந்துகொண்ட இயக்­கு­நர் பாரதி­ரா­ஜா­வும் பி.வாசு­வும் வாய்­விட்­டுச் சிரித்­த­னர்.

"இந்­தப் படத்­துக்கு 'காதல் செய்' என்று தலைப்பு வைத்­தி­ருக்­கி­றீர்­கள். நானும் காதல் செய்­யப் பார்க்­கி­றேன்.

"என்னை விட நிறைய காதல் செய்­கி­ற­வர்­கள் யாரும் இருக்க முடி­யாது. ஆனால், எதைக் காத­லிக்­க­ணும் என்­ப­துல நான் ரொம்ப தெள்­ளி­யனா இருக்­கி­றேன்," என்றார் இளை­ய­ராஜா.