திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
a6eaa38f-734a-423f-b483-6ac343a972da
-
multi-img1 of 2

 ஒவ்வோர் ஆண்டும் விடுமுறையின்போது தன் தோழிகளுடன் வெளிநாடு செல்வது திரிஷாவின் வழக்கம். தன் சொந்தச் செலவில் தோழிகளை மகிழ்விப்பார்.

கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய பயணங்கள் எதையும் மேற்கொள்ள முடியவில்லை. இப்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்திருப்பதை அடுத்து, அண்மையில் மெக்சிகோவுக்குப் பயணமாகி உள்ளார் திரிஷா. அங்கு நண்பர்களுடன் உற்சாகமாக சுற்றித் திரியும் புகைப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

அவற்றைக் கண்ட ரசிகர்கள், ஒப்பனையின்றி இன்னும் அழகாக இருப்பதாக திரிஷாவைப் புகழ்ந்துள்ளனர்.

 இந்தியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாத தால், மீண்டும் தென்னிந் திய மொழிகளில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார் ரகுல் பிரீத் சிங்.

முதற்கட்டமாக கோடம்பாக்க மரபுப்படி தனது கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவற்றைப் பார்த்த பலர் ரகுல் அழகாக இருப்பதாகப் பாராட்டி உள்ளனர். இன்னொரு தரப்போ ரகுலை சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மேலும் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு "சிலர் நெருப்புக்கு அஞ்சுகிறார்கள், சிலர் நெருப்பாக மாறுகிறார்கள்," என்று தத்துவார்த்தமாகப் பதிவிட்டுள்ளார் ரகுல்.

 மணிரத்னம் இயக்கி வரும் 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்நிலை யில், இரு பாகங்களுக்குமான இசை உரிமையை முன்னணி நிறுவனம் ரூ.20 கோடிக்கு வாங்க முன்வந்துள்ளதாம்.