அஜித் சம்பளம் ரூ.105 கோடி

அஜித் சம்பளம் ரூ.105 கோடி

2 mins read
22ea6937-90af-4bd7-b8cd-9ed7de766a76
-

'வலிமை' படத்­தின் வெளி­யீட்­டை­யொட்டி தொடங்­கிய அஜித் ரசி­கர்­க­ளின் கொண்­டாட்­டம் இன்­னும் குறை­ய­வில்லை. அந்தப் படம் ரூ.200 கோடி வசூல் செய்­தி­ருப்­ப­தாக தயா­ரிப்­பா­ளர் போனி கபூர் அறி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், அஜித்­தின் சம்­ப­ளம் நூறு கோடி ரூபா­யைக் கடந்­துள்­ள­தாக புதுத்­த­க­வல் வெளி­யாகி உள்­ளது.

அவ­ரது 62வது படத்தை விக்­னேஷ் சிவன் இயக்­கு­வதும் அதில் நயன்­தாரா நாய­கி­யாக நடிப்­ப­தும் தெரிந்த தக­வல்­கள். லைகா நிறு­வ­னம் தயா­ரிக்­கிறது.

இந்­நி­லை­யில், அஜித்­தின் சம்­ப­ளம் திடீ­ரென நூறு கோடி ரூபாயைக் கடந்­த­தன் பின்­னணி குறித்து தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது.

விக்­னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்­துக்­குப் பிடித்­துப்­போன நிலை­யில், சத்­ய­ஜோதி ஃபிலிம்ஸ் தான் இந்­தப் படத்தை தயா­ரிப்­ப­தாக இருந்­த­தாம். இதற்கு அஜித்­தி­டம் நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­யில் ரூ.80 கோடி சம்­ப­ளம் என தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அஜித் தரப்­பும் இதற்கு சம்­ம­தித்­த­தா­கத் தக­வல்.

இந்­நி­லை­யில், லைகா நிறு­வ­னத்­துக்கு இந்­தத் தக­வல் தெரி­ய­வர, அஜித்தை தங்கள் பக்­கம் இழுத்­துள்­ளது அந்­நி­றுவனம் என்­கி­றார் கோடம்­பாக்க மூத்த செய்­தி­யா­ளர் ஆர்.எஸ். அந்­த­ணன்.

லைகா நிறு­வ­னத்­துக்கு இந்­தத் தகவலைச் சொன்­ன­வர் நயன்­தாரா தானாம். லைகா உரி­மை­யா­ளர் சுபாஷ் கரன், நயன்­தா­ரா­வின் நெருங்­கிய நண்­பர்­களில் ஒரு­வர்.

"நீங்­கள் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னால் அஜித் கால்­ஷீட் ஒதுக்க முன்­வரு­வார், முயற்சி செய்­யுங்­கள்," என்­றா­ராம் நயன்­தாரா. அதை­யேற்று லைகா நிறு­வ­னத்­தார் அஜித்தை தொடர்பு கொண்டு பேச்­சு­வார்த்தை நடத்தி உள்­ள­னர். எடுத்த எடுப்­பி­லேயே ரூ.100 கோடி சம்­ப­ளம் என்று சொல்­லப்­பட, அஜித் சிறிய தயக்­கத்­துக்­குப் பிறகு சம்­ம­தித்­தா­ராம். அந்த மகிழ்ச்­சி­யில், "நீங்­கள் கேட்­டது நூறு கோடி.... அதற்­கும் மேல் ஐந்து கோடி­யா­கச் சேர்த்து மொத்­த­மாக 105 கோடி ரூபாய் தரு­வ­தாக ஒப்­புக்கொண்­டுள்­ளது லைகா," என்கி­றார் அந்­த­ணன்.

நடி­கர் விஜய் ஏற்­கெ­னவே தன் சம்­ப­ளத்தை நூறு கோடி­யாக உயர்த்­தி­விட்­டார். திரை­யு­ல­கில் அவ­ருக்­குப் போட்­டி­யாகக் கரு­தப்­படும் அஜித் மட்­டும் இவ்­வி­ஷ­யத்­தில் தயங்கி வந்­தார். இப்­போது இரு­வ­ருமே நூறு கோடி சம்­ப­ளப் பட்­டி­ய­லில் இணைந்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே இன்­னொரு தக­வ­லும் அண்மை­யில் கசிந்­துள்­ளது. கொரோனா இரண்­டா­வது அலை இந்­தி­யா­வில் கடு­மை­யாக இருந்த வேளை­யில், அஜித்­தும் விஜய்­யும் ரக­சி­ய­மாக சந்­தித்­துப் பேசி­யுள்­ள­னர் என்­ப­து­தான் அந்­தத் தக­வல்.

"இது­கு­றித்து யாரி­ட­மும் அவர்­கள் தெரி­விக்­க­வில்லை. குறைந்­த­பட்­சம் தங்­கள் உத­வி­யா­ளர்­க­ளைக் கூட உடன் இருக்க அனு­ம­திக்­க­வில்­லை­யாம். அப்­படி என்ன ரக­சி­ய­மா­கப் பேசி­னார்­கள் என்­பது தெரி­யாது. ஆனால் அஜித்­துக்கு நெருக்­க­மான ஒரு தயா­ரிப்­பா­ளர்­தான் இந்­தத் தக­வ­லைச் சொன்­னார்.

"அஜித்­தும் விஜய்­யும் நல்ல நண்­பர்­கள் என்­ப­தற்கு இது­போன்ற சந்­திப்­பு­கள்­தான் நல்ல ஆதா­ரம். அதே­ச­ம­யம் தொழில் ரீதி­யில் தங்­க­ளுக்கு இடையே உள்ள போட்­டியை இரு­வ­ரும் தக்க வைத்­துள்­ள­னர்," என்­கி­றார் அந்­த­ணன்.

இதற்­கி­டையே 'வலிமை' படத்தை இணை­யத்­தில் வெளி­யிட எதிர்த்து தொடுக்­கப்­பட்ட வழக்கு தள்­ளு­ப­டி­யா­னது. இத­னால் திட்­ட­மிட்­ட­படி அப்­ப­டம் ஓடி­டி­யில் வெளி­யா­கிறது.