ரெஜினா: இனி ஒற்றைப் பாடலுக்கு நடனமாட மாட்டேன்

ரெஜினா: இனி ஒற்றைப் பாடலுக்கு நடனமாட மாட்டேன்

1 mins read
63d3f007-6bee-486d-a09d-b9bd223231cf
'முகிழ்' படத்தில் விஜய் சேதுபதி, ரெஜினா. -

தெலுங்­குப் படத்­தில் ஒற்­றைப் பாட­லுக்கு குத்­தாட்­டம் போட்­டுள்­ளார் ரெஜினா. இத­னால் ரசி­கர்­கள் அவரை கடு­மை­யாக விமர்­சித்­துள்­ள­னர்.

"நல்ல நடிகை என்று பெய­ரெ­டுத்­துள்ள நிலை­யில், இப்­ப­டிப்­பட்ட முயற்­சி­கள் தேவை­தானா?" என்று சிலர் அவ­ரது சமூக ஊட­கப் பக்­கங்­களில் கருத்து தெரி­விக்க, இனி இது­போன்று செய்­ய­மாட்­டேன் என அறி­வித்­துள்­ளார் ரெஜினா.

சிரஞ்­சீவி நடிப்­பில் வெளி­யாக உள்ள ஆச்­சார்யா திரைப்­ப­டத்­தில் 'சாலா கஷ்டம்' என்ற ஒரு பாட­லுக்கு மட்­டும் நட­ன­மாடி உள்­ளார் ரெஜினா. இதற்­காக பெரிய தொகை சம்­ப­ள­மா­கக் கிடைத்­துள்ளது.

"ஒரு பாட­லுக்கு மட்­டும் நடனம் ஆடு­வ­தில் எனக்கு எப்­போ­துமே விருப்­பம் இருந்­த­தில்லை. ஆனால் சிரஞ்­சீவி என்ற பெரிய நடி­க­ருக்­காக என் நிலைப்­பாட்டை மாற்­றிக்­கொண்­டேன். வாய்ப்பு கிடைத்­தால் அவ­ரு­டன் ஒரு காட்­சி­யி­லா­வது இணைந்து நடிக்கவேண்­டும் என்­பது என் ஆசை­களில் முக்­கி­ய­மா­னது. இதை முன் எப்­போதோ அளித்த ஒரு பேட்­டி­யில்­கூட குறிப்­பிட்­டுள்­ளேன்.

"அப்­படி ஒரு வாய்ப்பு தேடி­வந்­த­தும் உடனே ஒப்­புக்­கொண்­டேன். சிரஞ்­சீ­வி­யு­டன் இணைந்து நட­னம் ஆடு­வ­தை­விட வேறு இனிய அனு­ப­வம் உள்­ளதா என்ன? எனி­னும் ஒற்­றைப் பாட­லுக்கு நட­ன­மா­டு­வதே இதுவே முத­லும் கடை­சி­யு­மாக இருக்­கும்," என்­கி­றார் ரெஜினா.

இதற்­கி­டையே, விஜய் சேது­பதி­யு­டன் இணைந்து நடிப்­பதை ஆசிர்­வா­த­மா­கக் கரு­து­வ­தா­க­வும் கூறி­யுள்­ளார். இரு­வ­ரும் இந்தி இணை­யத்­தொ­ட­ரில் இணைந்து நடிக்­கின்­ற­னர்.

"சேது­ப­தி­யு­டன் நடிக்­கும்­போது நம் திற­மை­யும் மெரு­கே­றும். நடிப்­பில் ஒரு முதிர்ச்சி ஏற்­படும். அவ­ரு­டன் மீண்­டும் பணி­யாற்ற விரும்பு­கி­றேன்," என்­கி­றார் ரெஜினா.

, :

  