நூறாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

நூறாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

1 mins read
b272b58b-e550-450a-8781-594ecc6fd7b6
விஜய் சேதுபதியுடன் வீரராகவன். -

புது­வை­யில் இயங்கி வரும் 'வள்­ள­லார் வேலை­வாய்ப்பு சேவை இயக்­கம்' என்ற தன்­னார்வத் தொண்டு நிறு­வ­னம் மூலம் நூறா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்­தி­ருக்­கிறது என்­கி­றார் அதன் நிர்­வாக அறங்­கா­வ­ல­ரான இ.பா.வீர­ரா­கவன்.

ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்றி வந்த இவ­ருக்கு சமூக சேவை­யில் ஆர்­வம் அதி­கம். கடந்த 2016ஆம் ஆண்டு வாட்ஸ் அப் குழக்­களின் மூலம் பல­ருக்கு வேலை வாய்ப்பு­களைப் பெற்­றுக் கொடுத்­துள்­ளார்.

இது­கு­றித்து விஜய் சேது­ப­திக்கு தெரிய வர, தாம் தொகுத்து வழங்­கிய தொலைக்­காட்சி நிகழ்ச்சி ஒன்­றில் வீர­ரா­ஹ­வனை பங்­கேற்கச் செய்­த­தன் மூலம் அவ­ரது சேவை இயக்­கம் மேலும் விரி­வ­டைந்­தது.

"அது­மட்­டு­மல்ல, வேறு பல உதவி­க­ளை­யும் செய்­தார் சேது­பதி. அத­னால் ஆசி­ரி­யர் பணி­யைக் கைவிட்டு சேவை இயக்­கத்­தில் முழு­மை­யாக என்னை இணைத்துக்­கொண்­டேன். என்­னு­டன் பணி­யாற்­றும் முழு­நேரப் பணி­யா­ளர்­க­ளுக்கு விஜய் ­சே­து­பதி மாதந்­தோ­றும் சம்பளம் வழங்கி வரு­கி­றார்.

"எங்­கள் அமைப்­பின் மூலம் இந்த மார்ச் மாதம் வரை 100,133 பேர் வேலை வாய்ப்பு பெற்­றுள்­ள­னர். 1,400 வாட்ஸ் அப் குழுக்­கள் மூலம் நானூறா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் எங்­க­ளு­டன் இணைந்­துள்ளனர்.

"இது­வரை 73 சுய­தொ­ழில் முனை­வர்­களை உரு­வாக்கி உள்­ளோம், 17 வேலை வாய்ப்பு முகாம்­களை நடத்தி உள்ளோம்.

"இது­கு­றித்து பொது­வெ­ளி­யில் பேச முற்­பட்ட போதெல்லாம் விஜய் சேது­பதி என்­னைத் தடுத்­து­விட்­டார்.

"இனி அவர் கோபித்­துக்கொண்­டா­லும் பர­வா­யில்லை. அவ­ரது இந்­தப் பெரிய பணி உல­கத்­துக்குத் தெரிய வேண்­டும் என்பதற்­காக இப்­போது சொல்கி­றேன்," என்­கி­றார் வீரராகவன்.