அக்‌ஷரா: நகைச்சுவை என்பது சவாலானது

3 mins read
a58f0949-54df-4571-99cb-cc0a6bd27dc7
-

"அச்­சம் மடம் நாணம் பயிர்ப்பு' படத்­தில் நடித்ததன் மூலம் திரை­யு­ல­கில் எனக்­கான பய­ணம் எப்­ப­டிப்­பட்­ட­தாக இருக்­கும் என்­பதை ஓர­ளவு கணித்­துள்­ளேன்," என்­கி­றார் கமல் மகள் அக்­ரஷா ஹாசன்.

முதன்­மு­றை­யாக நகைச்­சு­வை­யான கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தது மறக்க இய­லாத, சவாலான அனு­ப­வம் என்­கி­றார்.

'கடா­ரம் கொண்­டான்', 'விவே­கம்', இந்தியில் 'ஷமி­தாப்' என விரல் விட்டு எண்­ணக்­கூ­டிய படங்­களில் மட்­டுமே நடித்­துள்ள அக்­‌ஷ­ரா­வுக்கு திரை­யு­ல­கம் சார்ந்த எதிர்­பார்ப்­பு­கள் அதி­கம் உள்­ளன.

'அச்­சம் மடம் நாணம் பயிர்ப்பு' படத்­தின் தலைப்பு மட்­டு­மல்­லா­மல், அதன் முதல் ­தோற்­றச் சுவ­ரொட்டி, முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு என பல­வும் ரசி­கர்­களின் கவ­னத்தை ஈர்க்­கும் வித­மாக அமைந்­துள்­ளன. அவற்­றைப் பார்த்த பல­ரும் அக்­‌ஷ­ராவைத் தொடர்பு கொண்டு வாழ்த்­தி­யதோடு, மறக்­கா­மல் படத்­தின் கதை குறித்­தும் இவ­ரது கதா­பாத்­தி­ரம் பற்­றி­யும் விசா­ரித்­துள்­ள­னர்.

"கதைப்­படி நான் அப்­பா­விப் பெண்­ணாக நடித்­துள்­ளேன். அது­மட்­டு­மல்ல, நகைச்­சு­வைப் பகு­தி­க­ளி­லும் கவ­னம் செலுத்தி உள்­ளேன். நம்ம ஊர் பொண்ணு என்று சொல்­வார்­கள் அல்­லவா, அப்­ப­டி­யும் காட்சி அளிப்பேன்.

"படத்­தின் கதை­யைக் கேட்­ட­போது மிக­வும் சுவா­ர­சி­ய­மாக இருந்­தது. தமிழ் சினி­மா­வில் இப்­ப­டிப்­பட்ட கதையை யாரும் விரி­வா­கக் கையாண்­ட­தா­கத் தெரி­ய­வில்லை. வலு­வான கதை, திரைக்­கதை.

"மேலும், கதையை நகைச்­சுவை கலந்து விறு­வி­றுப்­பாக நகர்த்­திச் செல்­வ­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம் என்­பது புரிந்­தது. சமூ­கத்­துக்குத் தேவை­யான நல்ல கருத்தைச் சொல்லி இருக்­கி­றார்­கள் என்­ப­து­டன் கவ­ன­மா­க­வும் செயல்­பட்­டுள்­ள­னர்.

"எனது தனிப்­பட்ட வாழ்க்­கை­யில் சில தரு­ணங்­களை இந்­தப் படத்­து­டன் ஒப்­பிட்­டுப் பார்த்­த­போது, கச்­சி­த­மா­கப் பொருந்­தி­யது," என்று சொல்­லும் அக்­‌ஷரா, நகைச்­சு­வைக் காட்­சி­களில் நடிப்­பது பெரும் சவா­லாக இருந்­தது என்­கி­றார்.

இயக்­கு­நர் சொன்­ன­படி நடித்­த­தால் சமா­ளிக்க முடிந்­த­தாம். எனி­னும் இந்த அனு­ப­வம் தாம் திரை­யு­ல­கில் நீடிக்­கும்­வரை மிக­வும் உத­வி­கரமாக இருக்­கும் என்று உறு­தி­யா­கச் சொல்­கி­றார்.

முழு நேர நடி­கை­யா­கி­விட்­டீர்­கள். குடும்­பத்­தார் ஒத்­து­ழைப்பு எப்­படி உள்­ளது?

"வீட்­டில் அப்பா, அம்மா, அக்கா என்று மூவரி­ட­மும் வெளிப்­ப­டை­யா­கப் பேசு­வேன். யாருக்கு நேரம் இருக்­கி­றதோ, அதை உறுதி செய்துகொண்டு நானே தொடர்பு கொள்­வேன்.

"மூன்று பேருமே இன்­று­வரை எனக்கு ஆத­ர­வா­கத்­தான் உள்­ள­னர். ஒரு நடி­கை­யாக இந்­தப் படம் எனக்கு ரொம்ப முக்­கி­யம். கார­ணம், நான் எந்த மாதி­ரி­யான நடிகை­யாக முயற்சி செய்ய வேண்­டும் என்­ப­தைப் புரிய வைத்­தி­ருக்­கிறது. என் மன­தில் நம்­பிக்­கையை விதைத்து, நல்­ல­ப­டி­யாக வளர்த்திருக்­கிறது," என்­கி­றார் அக்­‌ஷரா.

இந்­தப் புதிய படத்­தில் பிர­பல பின்­ன­ணிப் பாடகி உஷா உதுப் இவ­ரது பாட்­டி­யாக நடித்­துள்­ளார். தமக்கு ஐந்து வய­தானபோது உஷாவை நேரில் சந்­தித்­தா­ராம் அக்­‌ஷரா. அப்­போது முதலே அவ­ரு­டன் நெருக்­கம் பாராட்டி வந்­துள்­ளா­ராம்.

"படப்­பி­டிப்­பின்­போது தன் வீட்­டுப் பெண்­ணைப் போல் என்னை அக்­கறை­யு­டன் பார்த்­துக்கொண்­டார். இந்த வய­தி­லும் ஏதா­வது கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்ற ஆர்­வம் அவ­ரி­டம் உள்­ளது. நான் பார்த்த பெண்­களில் மிக­வும் தன்­னம்­பிக்கை­யான, மாய சக்­தி­யும் திற­மை­யும் உள்ள பெண்­மணி. அவ­ரி­டம் கற்­றுக்­கொள்ள ஏரா­ள­மான விஷ­யங்­கள் உள்­ளன," என்­கி­றார் அக்­‌ஷரா.

'அச்­சம் மடம் நாணம் பயிர்ப்பு' படம் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யீடு காண்­கிறது. அந்­தத் தேதிக்­காக ஆர்­வ­மு­டன் காத்­தி­ருக்­கி­றா­ராம்.

அது மட்­டு­மல்ல, உல­கின் எந்த மூலை­யில் இருந்­தா­லும் தன் பெற்­றோர், அக்கா ஆகிய மூவ­ரு­டன் ஒரே நேரத்­தில் படம் பார்க்கத் திட்­ட­மிட்­டுள்­ளா­ராம் அக்­‌ஷரா.