ராஜமௌலி இயக்கி உள்ள 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் நேற்று வெளியீடு கண்டுள்ளது. படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தகவல்.
வட இந்தியாவில் திரையரங்க முன்பதிவு வசூல் மட்டுமே எட்டு கோடி ரூபாயைக் கடந்துள்ளதாம்.
படம் தொடர்பான பல்வேறு உரிமங்களை விற்பனை செய்ததன் மூலம் மொத்தமாக ரூ.800 கோடி திரண்டுள்ளதாகத் தகவல்.
எனவே இந்தப் படத்தின் தயாரிப்புத் தரப்புக்கு எந்த வகையிலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.
ரூ.300 கோடி செலவில் எடுக்கப்பட்ட 'ராதே ஷ்யாம்' திரைப்படத்தால் அதன் தயாரிப்பாளருக்கு நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், 'ஆர்ஆர்ஆர்' படம் திரை கண்டுள்ளது.
இதனால் 'ராதே ஷ்யாம்' படத்தை திரையரங்குகளில் இருந்து தூக்கிவிட்டனர்.
தமிழில் இப்படத்தின் வசூல் ஒரு கோடி ரூபாயைக்கூட தாண்டவில்லையாம்.

