'கடினமான போராட்டம்'

'கடினமான போராட்டம்'

1 mins read
f4ccb353-a866-49d9-8981-1f4e70a66461
பிரணிதா -

திரைப்­பட நடி­கை­க­ளின் வாழ்க்கை என்­பது நிறைய மேடு பள்­ளங்­கள் நிரம்­பி­யது என்­கி­றார் பிர­ணிதா.

மிகக் குறு­கிய இடை­வெ­ளி­களில் வெற்றி, தோல்­வி­க­ளைச் சந்­திக்­கும் நடி­கை­கள் அவற்றை ஏற்­றுக்­கொள்­ளும் பக்­கு­வத்­தை­யும் பெற்­றுள்­ள­தாக அண்­மைய சமூக ஊட­கப் பதிவு ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"திரை­யு­லக வாழ்க்கை என்­பது நிலை­யற்­றது. அது நன்கு தெரிந்­தி­ருந்­தும் சினிமா வாழ்க்­கையைத் தேர்ந்­தெ­டுக்­கும் துணிச்­சல் நடி­கை­க­ளி­டம் உள்­ளது.

"ஏற்­றுக்­கொண்ட கதா­பாத்­தி­ரத்­துக்­காக நாங்­களும் உடலை வருத்­திக்கொள்­கி­றோம். அதிக வசதி இல்­லாத இடங்­களில் தங்­கு­வது, தூங்­கு­வது என்று இருப்­போம். கௌர­வம் இல்­லாத வாழ்க்­கையை வாழ்­கி­றோம். சுகா­தா­ர­மற்ற இடங்­களில் கூட பணி­யாற்­று­கி­றோம்," என்று பிர­ணிதா கூறி­யுள்­ளார்.

மேலும், இரவு பகல் வித்­தி­யா­சம் இல்­லா­மல் குடும்­பம், தோழி­கள், உற­வி­னர்­களை விட்­டு­விட்டு குளி­ருக்கு நடுங்­கி­யும் மழை­யில் நனைந்­தும் வெயி­லில் காய்ந்­தும் நடி­கை­கள் பணி­யாற்­று­வ­தாக உருக்­கத்­து­டன் பதி­விட்­டுள்ள அவர், நடி­கை­கள் சக்­திக்கு மீறி உழைக்கவேண்­டிய கட்­டா­யத்­தில் இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இவ்­வ­ளவு கஷ்­ட­மும் கலைக்­கா­க­வும் ஒரு நல்ல வெற்றி கிடைக்­காதா என்­ப­தற்­கா­க­வும்­தான். அதற்­கான போராட்­டம் கடி­ன­மா­னது," என்­கி­றார் பிர­ணிதா. 'உதயம்' படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பின்னர் 'சகுனி' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார். இப்போது சமூக ஊடகங்களில் அதிகமாகத் தனது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்.