ஏப்ரல் 28ல் வெளியாகிறது 'மஹா'

ஏப்ரல் 28ல் வெளியாகிறது 'மஹா'

1 mins read
b30ada48-fe29-4889-9cf7-35551932aa31
-

ஒருவழியாக ஹன்சிகாவின் மன வருத்தம் முடிவுக்கு வருகிறது. வேறொன்றுமில்லை... அவர் நடிப்பில் உருவாகி உள்ள 'மஹா' திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியீடு காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஹன்சிகாவின் ஐம்பதாவது படம். கடந்த ஐந்து ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படம் மொத்தமாக முடங்கிவிட்டது என்று கூறப்பட்டது. படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே மோதல் என்றும் அதன் காரணமாகவே படம் முடங்கியதாகவும் தகவல். ஒருவழியாக அனைத்து பிரச்சினைகளையும் கடந்து படம் வெளியீடு காண உள்ளது. இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய பாத்திரத்திலும் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.