நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிரடி நாயகனாக களமிறங்கி உள்ளார் 'மைக்' மோகன்.
கடந்த 1980களில் முன்னணி நாயகனாக வலம் வந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் 'ஹரா' என்ற படத்தில் ஆக்ஷன் நாயகனாக நடிக்கிறார் மோகன்.
விஜய் ஸ்ரீ இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூசையுடன் தொடங்கி உள்ளது.
முதல் நாளன்றே சண்டைக்காட்சி படம்பிடிக்கப்பட்டது. அடுத்து கோவை, ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
"மோகன் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடினர். 'ஹரா' படத்திலும் அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்," என்கிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீ.

