திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read

 தாணு தயாரிப்பில் வெற்றிமாறன், சூர்யா கூட்டணியில் உருவாகிறது 'வாடிவாசல்' படம். அண்மையில் இப்படத்தின் ஒத்திகை படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட காட்சிகள் மனநிறைவைத் தந்ததை அடுத்து, முக்கிய காட்சிகளை சென்னையிலேயே அரங்கு அமைத்து படமாக்க முடிவெடுத்துள்ளாராம் இயக்குநர் வெற்றிமாறன். இப்படத்தை தாணுவுடன் இணைந்து தயாரிக்க ஜீ ஸ்டூடியோஸ் முன்வந்துள்ளது.

 மெலிந்து காணப்படுவதை பல நடிகைகள் விரும்பினாலும், ஒல்லியாக இருப்பதைவிட நல்ல உடல்நலத்துடன் இருப்பதுதான் மிக முக்கியம் என்கிறார் ராஷ்மிகா. வாரந்தோறும் நான்கு நாள்களுக்கு கடும் உடற்பயிற்சி செய்கிறாராம். குத்துச்சண்டை, ஸ்கிப்பிங், நீச்சல், நடனம், யோகா, நடைப்பயிற்சி ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். மேலும், தசைகள் வலுவாக இருப்பதற்கான சிறப்பு பயிற்சிகளையும் மேற்கொள் கிறார். தன் ரசிகர்களும் இவ்வாறு இருக்க வேண்டும் என விரும்புகிறார்களாம்.

 பிரசாந்த் நடித்துள்ள 'அந்தகன்' படத்தில் சந்தோஷ் நாராயணின் இசையில் சித் ஸ்ரீராம் குரலில் உருவான 'என் காதலும்' என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்ட இப்பாடலை இதுவரை 2.2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். அதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். விரைவில் அடுத்த பாடல் வெளியாகக்கூடும் எனத் தகவல்.

 விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் இணைந்து நடிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஏற்கெனவே 'கேங் லீடர்', 'ஜெர்சி' ஆகிய இரு தெலுங்குப் படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

 குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் அசத்திய மாஸ்டர் மகேந்திரன் இப்போது நாயகனாகி உள்ளார்.

அவர் நடிக்கும் புதிய படத்துக்கு 'அமிகோ காரேஜ்' என்று தலைப்பு வைத்துள்ளனர். பிரசாந்த் நாகராஜன் இயக்கும் இந்தப் படத்துக்காக ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ஒரு பாடலைப் பாடியுள்ளார் 'குக் வித் கோமாளி' தொலைக்காட்சி நிகழ்ச்சி புகழ் ஷிவாங்கி. "நான் ஜிவியின் தீவிர ரசிகை. இன்று அவருடன் இணைந்து பாடியுள்ளேன் என்பதை நம்ப முடியவில்லை," என்கிறார் ஷிவாங்கி.