சமந்தா, ரெஜினா ஆகியோரைப் பின்பற்றி இப்போது தமன்னாவும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்நிலையில், சில முன்னணி நடிகைகள் இனி இதுபோன்ற குத்தாட்டங்களுக்கு ஒப்புக்கொள்வதில்லை என முடிவெடுத்துள்ளனர்.
'புஷ்பா' படத்தில் சமந்தாவின் குத்தாட்டத்துக்கு வரவேற்பு, எதிர்ப்பு என இரண்டும் இருந்தன. இதேபோல் சிரஞ்சீவி நடித்த 'ஆச்சாரியா' படத்துக்காக பெரிய தொகையை சம்பளமாகப் பெற்றுக்கொண்டு ரெஜினா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.
இந்நிலையில், வருண் தேஜா நடித்துள்ள தெலுங்குப் படத்தில் தமன்னாவுக்கும் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட பல லட்ச ரூபாய் கொட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாம்.
'கானி' என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடல் நான்கு நிமிடங்கள் நீள்கிறது. இதையடுத்து தமன்னாவையும் சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
"நடிகை என்று ஆன பிறகு நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். நான் அதைத்தான் செய்துள்ளேன். இதில் குற்றம் சொல்லவோ, சர்ச்சை கிளப்பவோ ஒன்றுமில்லை," என்கிறார் தமன்னா.

