நண்பர்களுக்கு உதவி செய்த விஜய்

நண்பர்களுக்கு உதவி செய்த விஜய்

1 mins read
269fafca-2ab8-4848-ba58-19bd26cfab3f
-

விஜய் நடிக்­கும் 66வது படத்­தின் படப்­பி­டிப்பு ஏப்­ரல் முதல் வாரத்­தில் தொடங்­கு­கிறது. அதற்­கான ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­வ­தால், சற்று ஓய்வு கிடைத்­துள்­ள­தாம்.

இந்த வாய்ப்பைப் பயன்­ப­டுத்தி தனது கல்லூ­ரி ­கால நண்­பர்­களை அண்­மை­யில் சந்­தித்­துள்­ளார் விஜய். கல­க­லப்­பாக நடந்து முடிந்த இந்­தச் சந்­திப்­புக்­குப் பிறகு, இனி ஆண்­டுக்கு ஒரு­மு­றை­யா­வ­து இவ்­வாறு ஒன்று­கூட வேண்­டும் என முடி­வெ­டுத்­துள்­ள­னர்.

மேலும், நண்­பர்­க­ளு­டன் அரட்டை அடிப்­ப­தற்­காக இந்­தச் சந்­திப்­புக்கு விஜய் ஏற்­பாடு செய்­ய­வில்­லை­யாம். கொரோனா நெருக்­கடி வேளை­யில் இவ­ரது நண்­பர்­கள் சில­ருக்கு தொழில் ரீதி­யில் பல பாதிப்­பு­கள் ஏற்­பட்­டுள்­ளதை அறிந்து கவ­லைப்­பட்­ட­வர், நேரில் சந்­தித்­த­போது அது­கு­றித்து கேட்­ட­றிந்­துள்­ளார். பிறகு அந்த நண்­பர்­க­ளுக்­குப் பண உத­வி­யும் செய்­துள்­ளா­ராம்.

'விஜய் 66' படத்­தில் இந்தி நடி­கர் விவேக் ஓப­ராய் வில்­லன் என்­றும் ராஷ்­மிகா மந்­தனா தான் நாயகி என்­றும் கூறப்­ப­டு­கிறது.