அறந்தாங்கி நிஷாவை கலங்க வைத்த சாலை விபத்து

1 mins read
7dccdaaf-2dde-4b6f-a249-cadd3def5b31
கணவர், குழந்தைகளுடன் அறந்தாங்கி நிஷா. -

பல்­வேறு அவ­மா­னங்­களை எதிர்­கொண்ட பிற­கு­தான் வாழ்க்­கை­யில் முன்­னேற முடிந்­தது என்­கி­றார் சின்­னத்­திரை புகழ் அறந்­தாங்கி நிஷா.

குடும்­பத்­து­டன் காரில் சென்­ற­போது விபத்­துக்­குள்­ளா­ன­தில் தனது கைக்­கு­ழந்­தை­யின் காது பிய்ந்­து­விட்­டது என்­றும் அப்போது தனக்கு உத­வி­யவர்­களை என்­றும் மறக்க இய­லாது என்­றும் பேட்டி ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நான் கறுப்­பாக இருப்­ப­தா­கப் பலர் கேலி செய்­கி­றார்­கள். அது­கு­றித்து நான் கவ­லைப்­ப­டு­வதே இல்லை. இது என் தாய் கொடுத்த நிறம். அதை எனது பெரு­மை­யாகக் கரு­து­கி­றேன்.

"பிறந்த எட்­டா­வது நாளே மகளைத் தூக்­கிக்­கொண்டு நிகழ்ச்சிக­ளுக்கு செல்­லத் தொடங்கி­விட்­டேன். பலர் பல­வி­த­மாக விமர்­சித்­ததை நான் கண்டு­ கொள்­ள­வில்லை. இது எனக்­கான போராட்­டம்.

"ஒரு­முறை படப்­பி­டிப்­புக்­காக காரில் சென்­ற­போது திடீர் விபத்­தில் சிக்­கி­னோம். கார் கவிழ்ந்துவிட்­டது. என்ன நடந்­தது என்றே தெரி­ய­வில்லை. குழந்­தை­யின் அழுகை சத்­த­மும் கேட்­க­வில்லை.

"அப்­போது மூன்று இளை­யர்­கள் உத­வி­னர். அவர்­க­ளி­டம், குழந்தை எங்கே என்று தேடு­மாறு கேட்­டுக்­கொண்­டேன். அப்­போது கார் இருக்­கை­யின் கீழ்ப் பகு­தி­யில் இருந்து குழந்தை அழும் சத்­தம் கேட்­டது. வெளியே எடுத்­த­போது உடல் முழு­வ­தும் ரத்­தம். பிறந்து அறு­பது நாளே ஆன என் மக­ளின் காது பிய்ந்­து­விட்­டது என்று சொல்லி, மயக்க மருந்து கொடுக்கா­மல், அவள் கதறி அழ, அழ தையல் போடப்­பட்­டது. அந்தச் சோகத்தில் இருந்து மீண்டு வந்துள்ளேன்," என்­கி­றார் அறந்­தாங்கி நிஷா.