ஆஸ்கார் விருதுகளுக்கு இந்தியா முதன்முதலாகப் பரிந்துரைத்த 'ரைட்டிங் வித் ஃபையர்' (Writing With Fire), சிறந்த ஆவணப்பட விருதுக்காகத் தேர்ந்தெக்கப்படவில்லை. அமெரிக்காவின் 'சம்மர் ஆஃப் சோல்' (Summer Of Soul) என்ற ஆவணப்படத்திற்கு அந்த விருது கொடுக்கப்பட்டது.
இந்தப் படத்துடன், அசென்ஷன், அட்டிக்கா, ஃப்லீ உள்ளிட்ட படங்களும் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டன. சுஷ்மித் கோஷ்., ரிந்து தாமஸ் ஆகியோரால் இயக்கி, தயாரிக்கப்பட்ட 'ரைட்டிங் வித் ஃபையர்', இந்தியாவின் தாழ்த்தப்பட்ட 'தலித்' சமூகத்தைச் சேர்ந்த பெண் செய்தியாளர்கள் நடத்திய 'கபர் லகரியா' என்ற பத்திரிகையைப் பற்றியது இந்த ஆவணப்படம். இதற்கான படப்பிடிப்பு ஐந்து ஆண்டுகள் நீடித்தது

