ஆஸ்கார் மேடையில் படைப்பாளரின் கன்னத்தில் அறைந்த நடிகர்

ஆஸ்கார் மேடையில் படைப்பாளரின் கன்னத்தில் அறைந்த நடிகர்

1 mins read
14ae3cf3-96a3-402d-9e5b-f840cfba7285
-

இவ்வாண்டின் ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற வில் ஸ்மித், தம் மனைவியின் தலைமுடி உதிர்வு நோயைப் பற்றி நகைச்சுவையாகப் பேசிய படைப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார்.

சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வழங்க ராக் மேடைக்கு வந்திருந்தார். நிகழ்ச்சியின் பார்வையாளர்களைப் பற்றி கிண்டல் செய்யத் தொடங்கிய அந்த நகைச்சுவை நடிகர், திரு ஸ்மித்தின் மனைவியும் நடிகையுமான ஜேடா பிங்கெட் ஸ்மித்தின் கட்டையான முடியை ஜிஐ ஜேன் என வருணித்தார்.

Watch on YouTube

மனைவியின் தலைமுடியைப் பற்றி அவர் கேலி செய்ததைப் பொறுக்க முடியாமல் திரு ஸ்மித், பார்வையாளர் இருக்கையிலிருந்து மேடையேறி கிறிஸ் ராக்கைக் கன்னத்தில் அறைந்தார். இருக்கைக்குத் திரும்பிய திரு ஸ்மித், தம் மனைவியின் பெயரை இனி சொல்ல வேண்டாம் என கிறிஸ் ராக்கை எச்சரித்தார்.