லிங்குசாமியின் 'தி வாரியர்' படம் வெளியீடு

லிங்குசாமியின் 'தி வாரியர்' படம் வெளியீடு

1 mins read

லிங்குசாமி இயக்கி உள்ள 'தி வாரியர்' திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகிறது.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ராம் பொதினேனி நாயகனாகவும் ஆதி வில்லனாகவும் நடித்துள்ளனர். ராம் பொதினேனி காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு லிங்குசாமி இயக்கி உள்ள படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.