'காதலில் கைதேர்ந்த இளையரின் கதை இது'

'காதலில் கைதேர்ந்த இளையரின் கதை இது'

2 mins read
5da0132a-03de-49a7-ae78-7d9d80d08eb3
-

'மாநாடு' படத்தை இந்­தி­யில் மறு­பதிப்பு செய்­வ­தற்­கான பேச்­சு­வார்த்தை நடை­பெற்று வரு­கிறது. மற்­றொரு பக்­கம் சத்­த­மின்றி 'மன்­மத லீலை' என்ற படத்தை முடித்­துள்­ளார் வெங்­கட் பிரபு.

மேலும், தெலுங்­கில் நாக சைதன்­யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்­ளா­ராம்.

'மன்­ம­த­ லீலை' என்ன மாதிரி கதை என்று கேட்­டால் தனக்கே உரிய நகைச்­சு­வை­யு­டன் விவ­ரிக்­கி­றார் வெங்­கட் பிரபு.

"இது காதல் லீலை­யில் கைதேர்ந்த இளை­ய­ரின் கதை. பத்து ஆண்­டு­க­ளுக்கு முன் நடந்த சம்­ப­வ­மும் அண்­மைய நிகழ்வு ஒன்றும் ஒரே புள்­ளி­யில் சந்­திக்­கின்றன. இத­னால்­தான் அது, அத­னால்­தான் இது என்­கிற ரீதி­யில் சில சம்­ப­வங்­கள் தொடர்­கின்­றன.

"முற்­றி­லும் வித்­தி­யா­ச­மான திரைக்­க­தை­யைக் கையாள முயற்சி செய்­துள்­ளேன். என்­னு­டைய உதவி இயக்­கு­நர் மணி எழு­திய கதை இது. கொரோனா முழு அடைப்­பின்­போது நான் சொன்ன சிறிய ஐடி­யாவை வைத்து பெரிய கதையை உரு­வாக்கி உள்­ளார். கதை, திரைக்­கதை இரண்­டுக்­கும் கிடைக்­கும் பாராட்­டு­கள் அவ­ரைத்­தான் போய்ச் சேர வேண்­டும்.

"இரண்டு வெவ்­வேறு கால­கட்­டங்­களில் நிகழ்ந்­த­வற்றை அடுத்­த­டுத்து சொல்­லிக்கொண்­டி­ருப்­போம். படம் பார்க்­கும்­போது ரசி­கர்­க­ளுக்கு நன்கு புரி­யத் தொடங்­கும். அனை­வ­ருக்­கும் இது புதிய அனு­ப­வ­மா­க­வும் இருக்­கும். இந்­தப் படத்­தில் பாடல்­களே கிடை­யாது.

"இது திரை­ய­ரங்க வெளி­யீட்­டுக்­காக எடுக்­கப்­பட்ட படம் அல்ல. நேர­டி­யாக ஓடிடி தளத்­தில் வெளி­யி­டு­வதே திட்­டம்.

"திரை­ய­ரங்­கில் வெளி­வ­ரும்­போது ஒரு பிரச்­சினை ஏற்­படும் என்று நினைத்­தேன். சினிமா பிர­ப­லங்­கள் இந்­தப் படத்தை 'மாநாடு' படத்­து­டன் ஒப்­பிட்­டுப் பேசு­வார்­கள். ஆனால் அது சரி­யல்ல.

"இது குறைந்த செல­வில் எடுக்­கப்­பட்ட படம். 'மாநாடு' பெரும் பொருட்­செ­ல­வில் பெரிய நடி­கர்­க­ளைக் கொண்டு உரு­வாக்­கப்­பட்­டது. எனவே, இரண்­டை­யும் ஒப்­பி­டக்­கூ­டாது.

"எனி­னும், திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­கள் விட­வில்லை. இது அழ­கான படம் என்று கூறி ஆத­ரவு அளிக்க முன்­வந்­த­னர்," என்­கி­றார் வெங்­கட் பிரபு.

அசோக்­செல்­வன் நாய­க­னா­க­வும் சம்­யுக்தா ஹெக்டே, ஸ்மி­ருதி வெங்­கட், ரியா சுமன் ஆகி­யோர் நாய­கி­க­ளா­க­வும் நடித்­துள்­ள­னர்.

ஜெயப்­பி­ர­காஷ், பிரேம்ஜி, 'கயல்' சந்­தி­ரன், கரு­ணா­க­ரன் ஆகியோரும் உள்­ள­னர். பிரேம்ஜி இசை­ய­மைக்­கி­றார்.

படம் மிக விரைவில் திரைகாண உள்ளது. வெங்கட் பிரபு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

'மன்மத லீலை' படப்பிடிப்பின்போது வெங்கட் பிரபு, அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே.