சூர்யாவின் 'வாடிவாசல்' திரைப்படத்துக்கான ஒத்திகை அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இதையடுத்து, படப்பிடிப்புக்கான திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்துள்ளாராம் இயக்குநர் வெற்றிமாறன்.
அதன்படி, ஏற்பாடுகள் செய்வதென்றால் படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடி ரூபாயை கடந்துவிடும் என்கிறார்கள்.
இதனால் வெற்றிமாறன் தரப்பு தயங்க, நாயகன் சூர்யாவோ, எதுகுறித்தும் தயங்கவேண்டாம் என்றும் தயாரிப்புச் செலவு அதிகமானாலும் கவலை இல்லை என்றும் கூறியுள்ளாராம்.
இந்தப் படத்தில் நடிகர் கருணாஸ் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார். ஒத்திகையின்போது சூர்யாவின் நடிப்பையும் துணிச்சலையும் கண்டு அசந்துபோனதாகச் சொல்கிறார் கருணாஸ்.
சூர்யா நடித்த படங்களிலேயே 'வாடிவாசல்' படம்தான் ஆக அதிகமான பொருள் செலவில் உருவாகிறது என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் குறிப்பிடுகிறார்கள்.
இந்தப் படத்தின் பாடல் காட்சிகளை வித்தியாசமாகவும் அதே சமயம் இயல்பாகவும் இருக்கும்படி படமாக்க உள்ளாராம் வெற்றிமாறன்.
இதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளதாகத் தகவல்.