இப்படியும் சம்பாதிக்கலாம்

இப்படியும் சம்பாதிக்கலாம்

2 mins read
0ecbe1e6-708d-4b80-ada1-145834f0796e
-

முன்­னணி நடி­கர், நடி­கை­கள் சமூக ஊட­கங்­க­ளின் வழி அவ்­வப்­போது தாங்­கள் நடிக்­கும் புதுப்­படங்­கள் தொடர்­பான விவ­ரங்­களை வெளி­யிட்டு வருகின்றனர்.

பாடல், முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு, வெளி­யீட்­டுத் தேதி, படப்­பி­டிப்­பில் எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­கள், முதல் தோற்­றச் சுவ­ரொட்டி என சீரான இடை­வெ­ளி­களில் அவர்­க­ளது பதி­வு­கள் இடம்­பெ­றும்.

இதன் மூலம் படத்­தின் தயா­ரிப்­புத்­த­ரப்­புக்கு நடி­கர், நடி­கை­கள் உதவி செய்­வ­தாக ரசி­கர்­கள் நினைக்­கக்­கூ­டும். சிலர் இத்­த­கைய எண்­ணத்­து­டன் இருந்­தா­லும், பெரும்­பா­லா­னோர் சமூக ஊட­கங்­கள் மூலம் சம்­பா­திக்­கி­றார்­கள் என்­பதே உண்மை.

இது­போன்ற பதி­வு­களை விளம்­ப­ர­மா­கக் கருதி, படத்­தயாரிப்­புத் தரப்பு லட்­சக்­க­ணக்­கில் பணத்தை கொட்­டிக்­கொ­டுக்­கிறது. எத்­தனை மில்­லி­யன் பேர் சமூக ஊட­கங்­களில் ஒரு பிர­ப­லத்தை பின்­தொ­டர்­கி­றார்­கள் என்­ப­தைப் பொறுத்து, அவர்­கள் வெளி­யி­டும் பதி­வு­க­ளுக்­கான தொகை மாறு­ப­டு­கிறது.

நடி­கை­க­ளைப் பொறுத்­த­வரை, திரை­யு­ல­கம் சார்ந்த பதி­வு­கள் தவிர, அழகு சாத­னப் பொருள்­கள், ஆடை­கள், நகை­கள் குறித்த விளம்­ப­ரங்­களை­யும் வெளி­யி­டு­கின்­ற­னர்.

அந்த வகை­யில், நடிகை சமந்தா ஏரா­ள­மான பதி­வு­களை தொடர்ந்து வெளி­யிட்டு வரு­கி­றார். அவரை இரு­பது மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் சமூக ஊட­கங்­களில் பின்­பற்­று­கின்­ற­னர். அத­னால் தனது ஒவ்­வொரு பதி­வுக்­கும் சுமார் பத்து லட்­சம் ரூபாய் பெற்று வரு­கி­றா­ராம். மிக விரை­வில் இதை இரட்­டிப்­பாக உயர்த்த அவர் முடிவு செய்­துள்­ளார்.

நடி­கை­கள் காஜல் அகர்­வால், தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்­ளிட்ட பல­ரும் அந்த வகை­யில் பணம் ஈட்டி வரு­கின்­ற­னர்.

நயன்தாரா பொதுவாக தாம் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்பதற்கும்கூட தனியாக ஒரு தொகையைப் பெற்று வந்தார். இப்போது அவரும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி லாபம் பார்த்து வருகிறார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஒரு படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ நடிகைகள் நன்றாக காசு பார்ப்பதாக கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள் கூறுகின்றனர்.