ரஜினியுடன் இணையும் சிவகார்த்திகேயன்

ரஜினியுடன் இணையும் சிவகார்த்திகேயன்

1 mins read
91fb613a-57eb-4185-abb1-d5ee2d32a969
ரஜினியுடன் சிவகார்த்திகேயன். -

ரஜி­னி­காந்­தின் 169வது படம் குறித்த தக­வல்­கள் இப்­போதே ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்து வரு­கின்­றன.

இந்­தப் படத்தை வில்­சன் திலிப்­கு­மார் இயக்­கு­வது முடி­வா­கி­விட்­டது. அவர் படத்­துக்கு ஆங்­கி­லத் தலைப்பை வைக்க விரும்­பு­வ­தாக கூறப்­படும் நிலை­யில், ரஜினி ரசி­கர்­கள் அது குறித்து சமூக ஊட­கங்­களில் விவா­தித்து வரு­கி­றார்­கள்.

ஆளா­ளுக்கு ஒரு தலைப்பை வெளி­யிட்­டுக்கொண்­டி­ருக்க, படத்­தின் தயா­ரிப்­புத் தரப்பு ஐந்து தலைப்­பு­க­ளைத் தேர்வு செய்து ரஜி­னி­யின் ஒப்­பு­த­லுக்கு அனுப்பி வைத்­துள்­ள­தாம்.

அதில், 'பாஸ்' என்ற தலைப்பு இடம்­பெற்­றுள்­ள­தா­க­வும் அநே­க­மாக அதைத்­தான் ரஜினி தேர்வு செய்­வார் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, ரஜி­னி­யு­டன் இந்­தப் படத்­தில் சிவ­கார்த்­தி­கே­ய­னும் இணை­வார் என்­றும் கோடம்­பாக்­கத்­தில் ஒரு தக­வல் உலா வரு­கிறது.

இயக்­கு­நர் நெல்­சன் திலிப்­கு­மா­ரும் சிவா­வும் நெருக்­க­மான நண்­பர்­கள். அந்த அடிப்­ப­டை­யில்­தான் 'பீஸ்ட்' படத்­தில் ஒரு பாடலை எழு­தி­னார் சிவா.

இந்­நி­லை­யில், ரஜினி படத்­தில் கூடு­த­லாக அவர் நடிக்­க­வும் செய்­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிவா­வும் அடுத்­த­டுத்து நாய­க­னாக நடிப்­ப­தால் ரஜினி படத்­தில் அவர் சிறிய வேடத்தை மட்­டும் ஏற்­பார் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, சிவ­கார்த்­தி­கேயன் நடிக்­கும் புதிய படத்­தில் அவ­ருக்கு ஜோடி­யாக நடிக்க சமந்­தா­வி­டம் பேச்­சு­வார்த்தை நடந்து வரு­வ­தா­கத் தக­வல்.

சமந்தா தரப்­பில் பெரிய தொகை சம்­ப­ள­மாக கேட்­கப்­பட்ட போதும் படத்­தின் தயா­ரிப்­பா­ளர் சிவா என்­ப­தால் உடனே ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­தாம். இந்த ஆண்டு இறு­தி­யில் படப்­பி­டிப்பு தொடங்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.