விஜய் படத்தில் புது நாயகி

விஜய் படத்தில் புது நாயகி

3 mins read
9eadd358-29ee-4f2f-afc5-8fac0bb7c977
-

'பீஸ்ட்' படத்­தின் வெளி­யீட்­டுத் தேதி அறி­விக்­கப்­பட்ட உட­னேயே விஜய்­யின் அடுத்­த­டுத்த படங்­கள் குறித்த விவா­தங்­கள், கருத்து பரி­மாற்­றங்­கள், சமூக ஊட­கங்­களில் தொடங்­கி­விட்­டன.

அந்த வகை­யில், 'தள­பதி 66' படத்­தின் நாயகி யார் என்­பது குறித்த எதிர்­பார்ப்பு அதி­க­ரித்து வரு­கிறது.

தொடக்­கத்­தில் ராஷ்­மிகா மந்­த­னா­தான் விஜய்­யு­டன் இணை­யப் போகி­றார் என்று பர­வ­லா­கப் பேசப்­பட்­டது. கார­ணம், இந்­தப் படத்தை இயக்­கும் வம்சி படி­யப்­பள்ளி, தெலுங்­கில் முன்­னணி இயக்­கு­நர்­களில் ஒரு­வர், எனவே, தெலுங்­கில் கோலாச்­சிக் கொண்­டி­ருக்­கும் ராஷ்­மி­கா­தான் இயக்­கு­ந­ரின் தேர்­வாக இருப்­பார் என்று கூறப்­பட்­டது.

இடை­யில் என்ன நடந்­ததோ தெரி­ய­வில்லை. விஜய் ஜோடி­யாக நடிக்­கப்­போ­வது தமன்னா என்று ஒரு தக­வல் கசிந்­தது. இத­னால் விஜய் ரசி­கர்­கள் ஆச்­ச­ரி­யம் அடைந்­த­னர். தமன்னா கைவ­சம் பெரிய படங்­கள் ஏதும் இல்லை.

ஏற்­கெ­னவே ஒப்­புக்­கொண்ட படங்­களில் நடித்து முடித்­து­விட்­டால் வீட்­டில் சும்மா இருக்க வேண்­டி­ய­து­தான். அத்­த­கைய நிலை ஏற்­ப­டு­வ­தற்கு முன்பு சுதா­ரித்­துக்­கொள்ள வேண்­டும் என்­ப­தால் ஒன்­றி­ரண்டு படங்­களில் ஒற்­றைப் பாட­லுக்கு குத்­தாட்­டம் போட ஒப்­புக்­கொண்­டுள்­ளார். அவரை எப்­படி விஜய் படத்­துக்கு தேர்வு செய்­த­னர்? என்பது­தான் விஜய் ரசி­கர்­க­ளுக்கு ஆச்­ச­ரி­யத்தை ஏற்­படுத்­தி­யது.

எனி­னும், பிறகு வெளி­யான ஒரு தக­வல் அவர்­களை அமைதிப்­ப­டுத்­தி­யுள்­ளது என­லாம்.

அதா­வது, கதைப்­படி, விஜய்க்கு இந்­தப் படத்­தில் இரண்டு வேடங்­க­ளாம். அதில், திடீ­ரென மயக்­கம் போட்டு விழக்­கூ­டிய உடல்­ந­லக் கோளா­றால் அவ­திப்­ப­டு­ப­வ­ராக நடிக்­கி­றா­ராம். ஒரு­சில காட்­சி­களே வரும் இந்த கதா­பாத்­தி­ரத்­திற்­குத்­தான் தமன்னா ஜோடி­யாக நடிப்­ப­தா­கத் தக­வல்.

இந்­நி­லை­யில், புதுத்­த­க­வல் ஒன்று கோடம்­பாக்­கத்­தில் உலா வரு­கிறது. இந்­தி­யில் முன்­னணி நடி­கை­யாக இருக்­கும் கிரித்தி சனோன் விஜய் படத்­துக்கு ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

தெலுங்­கில் இருந்து இந்­திக்­குச் சென்று பெயர் வாங்­கிய பூஜா ஹெக்­டே­வைப் போல் இவ­ரும் தெலுங்­குப் படத்­தில் அறி­மு­க­மாகி, பின்­னர் பாலி­வுட் பக்­கம் சென்­ற­வர், கோடிக்­க­ணக்­கில் சம்­ப­ளம் வாங்­கு­வ­தா­கத் தக­வல்.

பஞ்­சாபி குடும்­பத்­தைச் சேர்ந்த கிரித்தி சனோன், படிப்­பில் கெட்­டிக்­கா­ர­ராம். பொறி­யி­யல் பட்­ட­தாரி. படிப்பை முடித்த கையோடு, தனி­யார் நிறு­வ­னம் ஒன்­றில் பணி­யாற்­றும் வாய்ப்பு கிடைத்­த­போது, அதை ஏற்க இருந்­தா­ராம்.

அந்த நேரம் பார்த்து 'மாட­லிங்' செய்­யும் வாய்ப்­பும் தேடி வர, அதைத் தேர்வு செய்­துள்­ளார் கிரித்தி. இரண்­டொரு விளம்­ப­ரப் படங்­களில் தலை­காட்­டிய கையோடு, தெலுங்­குப் படத்­தில் நாய­கி­யாக அறி­மு­க­மா­னார்.

அதன் பிறகு, இந்­தி­யில் நடிக்­கக் கேட்டு சிலர் அணுக, தெலுங்கு தேசத்­தில் இருந்து மூட்டை முடிச்­சு­க­ளு­டன் மும்­பைக்­குப் பறந்து­விட்­டார்.

கிரித்தி சனோ­னுக்கு இப்­போது 32 வய­தா­கிறது. எனி­னும், இவ­ருக்­கென்று இளம் ரசி­கர் கூட்­டம் ஒன்று உள்­ளது.

சமூக ஊட­கங்­களில் அடிக்­கடி தனது கவர்ச்­சிப் படங்­களை வெளி­யிட்டு இளை­யர்­க­ளின் தூக்­கத்­தைக் கெடுக்­கும் நாய­கி­க­ளின் பட்­டி­ய­லில் இவ­ரும் இடம்­பெற்­றுள்­ளார்.

அதி­கம் பேச மாட்­டார், சம்­பள விஷ­யத்­தில் கறார் காட்ட மாட்­டார் என்­றெல்­லாம் நற்­சான்­றி­தழ் வாங்­கி­யி­ருக்­கும் கிரித்­திக்கு, தமி­ழில் அறி­மு­க­மாக வேண்­டும் என்­ப­தில் நான்­கைந்து ஆண்­டு­க­ளுக்கு முன்பே மிகுந்த விருப்­பம் இருந்­துள்­ளது.

எனி­னும், கொரோனா தொற்று, ஏற்­கெ­னவே ஒப்­புக்­கொண்ட படங்­கள் என்று எல்­லாம் சேர்ந்­து­கொள்ள, கோடம்­பாக்­கம் பக்­கம் திரும்­பிப் பார்க்­கக்­கூட முடி­ய­வில்லை.

தற்­போது விஜய் படத்­தின் மூலம் தமி­ழில் அறி­மு­க­மா­கும் வாய்ப்பு தேடி வந்­தி­ருப்­ப­தில் உற்­சா­க­மாக உள்­ளா­ராம் கிரித்தி சனோன்.

எனி­னும், ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தாகி படப்­பி­டிப்பு தொடங்­கும் வரை வாய் திறக்­கக்­கூடாது என்று கிரித்தி தரப்பு முடிவு செய்­தி­ருப்­ப­தா­கத் தக­வல்.

"தமிழ் ரசி­கர்­கள் திற­மைக்கு ஆத­ரவு கொடுப்­ப­வர்­கள். அவர்­க­ளி­டம் நல்ல பெயர் வாங்க வேண்­டும் என விரும்பு­கி­றேன்," என்­கி­றார் கிரித்தி சனோன்.