விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.
இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பை நிறைவு செய்யும் விதமாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அக்காட்சிகளைக் காட்டும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்தக் கொண்டாட்டத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக, நயன்தாரா உடனான புகைப்படம் ஒன்றை சமந்தா வெளியிட்டிருந்தார். இரு நடிகைகளும் ஒருவரையொருவர் அரவணைத்துக்கொள்வதை அந்தப் படம் காட்டியது.


