'விஜய்தான் தூண்டிவிட்டார்'

'விஜய்தான் தூண்டிவிட்டார்'

3 mins read
ae4792ca-60e2-4b03-b641-33c702a1b038
-

'பீஸ்ட்' படத்தை முடித்த கையோடு ரஜி­னியை வைத்து இயக்­கும் படத்­துக்­கு­ரிய பணி­க­ளைச் சத்­த­மின்றி தொடங்­கி­விட்­டார் இயக்­கு­நர் நெல்­சன் திலீப்­கு­மார்.

தமக்கு ரஜினி படத்தை இயக்­கும் வாய்ப்பு கிடைத்­த­தற்கு விஜய்­தான் முக்­கிய கார­ணம் என்­றும் சொல்­கி­றார்.

'பீஸ்ட்' படப்­பி­டிப்பு முடி­வ­டை­யும் நேரத்­தில் திடீ­ரென ஒரு­நாள் என்­னி­டம், 'ரஜினி சார் அடுத்த படத்­துக்கு கதை கேட்டு வரு­வ­தா­கக் கேள்­விப்­பட்­டேன். நீங்­கள் ஏன் முயற்சி செய்­யக்­கூ­டாது?' என்று என்­னி­டம் கேட்­டார் விஜய்.

"நான் தயக்­கத்­து­டன் இருப்­ப­தைப் பார்த்து, 'நீங்­கள் கதையை மட்­டும் உரு­வாக்­குங்­கள். எல்­லாம் நல்­ல­வி­த­மாக நடக்­கும். எனக்கு நம்­பிக்கை இருக்­கிறது' என்­றார். அவ­ரது அந்த நம்­பிக்­கை­தான் என்னை உசுப்­பேற்­றி­யது.

"அதன் பிறகு ஒரு கதையைத் தயார் செய்து, ரஜினி சாரி­டம் சொன்­னேன். விஜய் சொன்­ன­து­போல் எல்­லாம் நன்­றா­கவே நடந்­தது," என்­கி­றார் நெல்­சன்.

'பீஸ்ட்' எப்­ப­டிப்­பட்ட பட­மாக இருக்­கும்?

"விஜய் படங்­க­ளுக்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் எத்­த­கைய எதிர்­பார்ப்­பு­கள் இருக்­கும் என்­பது எல்­லோ­ருக்­குமே தெரி­யும். அவற்றை நிறை­வேற்­றும் வகை­யில் எல்­லோ­ருமே கடு­மை­யாக உழைத்­திருக்­கி­றேன். ஒவ்­வொரு காட்­சி­யை­யும் ரசித்­துப் பட­மாக்கி உள்­ளோம். அதே­ச­ம­யம் என்­னு­டைய முந்­தைய படங்­க­ளான 'கோல­மாவு கோகிலா' அல்­லது 'டாக்­டர்' போன்ற சாயல் 'பீஸ்ட்' படத்­தில் அறவே இருக்­காது.

"இது முழு­வ­தும் வேறு மாதி­ரி­யான படம். அடி­த­டிக்­கும் அதி­ர­டிக்­கும் பஞ்­சமே இருக்­காது. படம் முழு­வ­தும் நகைச்­சுவை இருக்­கும்," என்று சொல்­லும் நெல்­சன், சிறு வயது முதலே விஜய்­யின் தீவிர ரசி­க­ராம். எனி­னும் 'பீஸ்ட்' படத்­தில் தனது பாணி­யை­யும் கலந்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

கதா­நா­ய­கன் திடீ­ரென நெருக்­க­டி­யான சூழலை எதிர்­கொள்­கி­றார். அப்­போது ஆபத்­தில் சிக்­கி­யுள்ள பலரை எப்­ப­டிக் காப்­பாற்­று­கி­றார் என்­பது­தான் 'பீஸ்ட்' படத்­தின் கதை.

"இந்த ஒற்றை வரி முத­லில் அவ­ருக்­குப் பிடிக்க வேண்­டும். அதன் பிறகு நேரில் சந்­தித்து இரண்டு மணி நேர படத்­துக்­கான கதையை விரி­வா­கச் சொல்ல வேண்­டும். மேலும், இந்­தப் படத்தை எனது பாணி­யில் எடுக்கவேண்­டும் என்­ப­தி­லும் உறு­தி­யாக இருந்­தேன். ஆனால் இதற்­கெல்­லாம் விஜய் சம்­ம­திப்­பாரா என்ற தயக்­கம் இருந்­தது.

"அவரோ கதை­யைக் கேட்­ட­தும் ரொம்­பப் பிடித்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார். அது மட்­டு­மல்ல, நான் நினைத்­த­தை­விட அவ­ரு­டன் இணைந்து பணி­யாற்­று­வது எளி­தாக இருந்­தது. இரு­வ­ரது மன­துக்­குள்­ளும் ஒரு நட்பு ரீதி­யி­லான அதிர்வு இருப்­ப­தாக உணர்ந்­தேன். ஒரு­வித நட்­பான சூழல்­தான் படப்­பி­டிப்பு முடி­யும் வரை இருந்­தது. அதற்கு விஜய்­யின் எளி­மை­யும் நட்­பான அணு­கு­மு­றை­யும்­தான் கார­ணம் என்­பேன்," என்­கி­றார் நெல்­சன்.

விஜய் இவ­ரது பெய­ரைச் சுருக்கி, 'நெல்சா' என்­று­தான் அழைப்­பா­ராம். அடிக்­கடி 'எல்­லாம் சரி­யாக நடக்­கி­றதா?' என்­றும் விசா­ரிப்­பா­ராம்.

"ஒரு­நாள் அவ­ரு­டன் சேர்ந்து இரவு உணவு சாப்­பிட்­டோம். சாதா­ரண பிரி­யாணிதான் இருந்­தது. இதை வெளி­யி­லேயே சாப்­பிட்டு இருப்­பேனே என்று கிண்­ட­ல­டித்­தேன். அவரோ, நெல்சா... வாழ்க்கை என்­பது இவ்­வ­ள­வு­தான் என்று சிரித்­த­ப­டியே சொன்­னார்.

"படப்­பி­டிப்­பின் போதும்­கூட நமக்கு அவ­ரால் எந்­த­வித அழுத்­த­மும் ஏற்­ப­டாது. நம்மை அன்­பா­க­வும் அக்­கறை­யா­க­வும் கவ­னித்­துக் கொள்­வார். 'பீஸ்ட்' பட நினை­வு­கள் காலம் கடந்­தும் இனி­மை­யான அனு­ப­வங்­க­ளாக மன­தில் நிலைத்து நிற்­கும்," என்­கி­றார் நெல்­சன் திலீப்­கு­மார்.

பூஜா ஹெக்­டே­வைத் தேர்வு செய்ய கார­ணம்?

"பீஸ்ட்' பட நாய­கி­யைத் தேர்வு செய்­யும்­போது இது­வரை அவ­ரு­டன் நடிக்­காத ஒரு­வ­ராக இருக்கவேண்­டும் என்று விரும்­பி­னோம்.

"மேலும், விஜய்­யின் உய­ரத்துக்­குப் பொருத்­த­மா­க­வும் இருக்க வேண்­டும் என்ற கோணத்­தி­லும் யோசித்­த­போது பூஜா ஹெக்டே நினை­வுக்கு வந்­தார். அவர் கடின உழைப்­பாளி. நாங்­கள் எதிர்­பார்த்­த­து­போல் சிறப்­பாக நடித்­தி­ருக்­கி­றார்.

"அதே­போல் இன்­னொரு கதா­பாத்­தி­ரத்­துக்கு புதி­தாக ஒரு­வர் தேவைப்­பட்­டார். அப்­போது செல்­வ­ரா­க­வன் சார் நினைவு வந்­தது. அவ­ரி­டம் கேட்­ட­போது உடனே ஒப்­புக்­கொண்டார்," என்­கி­றார் நெல்­சன்.