விக்ரம் பிரபு நடித்துள்ள 'டாணாகாரன்' படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதைக்களம் என்பதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து உள்ளன.
இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயகியாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம், ஏப்ரல் 8ஆம் தேதி வெளியீடு காண இருப்பதாக இப்படத்தின் இயக்குநர் தமிழ் தெரிவித்துள்ளார்.
"சுதந்திரப் போராட்டத்துக்கு முன்பு காவல்துறையினரை தமிழகத்தில் 'டாணாகாரன்' எனக் குறிப்பிடுவார்கள்.
"அந்தப் பெயரைப் பயன்படுத்தியதற்கான காரணம் படம் பார்க்கும்போது தெரியும்.
"விக்ரம் பிரபு பயிற்சிக் காவலராக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்," என்கிறார் இயக்குநர் தமிழ்.

