ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ஐங்கரன்' திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை 'ஈட்டி' படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கியுள்ளார்.
பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் இப்படம் வெளியாகவில்லை.
இது தொடர்பான பிரச்சினைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். நாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டிலேயே இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகிவிட்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தபோதிலும் படம் வெளியாகவில்லை.
இதற்கிடையே ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'செல்ஃபி' படமும் இன்று வெளியாகிறது.
தனது நடிப்பில் இரு படங்கள் ஒரே மாதத்தில் வெளியாவதால் ஜி.வி.பிரகாஷ் உற்சாகத்தில் உள்ளார்.

