இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் படங்களை சீனாவில் வெளியிடுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியில் அஜய்தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் வெளியான 'திரிஷ்யம்' படத்தை சீன மொழியில் வெளியிட உள்ளனர்.
மோகன்லால், மீனா இணைந்து நடித்து மலையாளத்தில் 2013ல் திரைக்கு வந்த 'திரிஷ்யம்' படம் வசூலில் சாதனை நிகழ்த்தியது.
இதையடுத்து, இந்தப் படத்தை 'பாபநாசம்' என்ற தலைப்பில் தமிழில் மொழிமாற்றம் செய்து நடித்தார் கமல்ஹாசன். அதுவும் வெற்றிபெற்றது.
பின்னர் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் 'திரிஷ்யம்' மறுபதிப்பாகி பெரும் வசூல் கண்டது.
இந்நிலையில், 'திரிஷ்யம்' இந்தி மொழி மறுபதிப்பில் ஸ்ரேயாவும் அஜய் தேவ்கனும் இணைந்து நடித்தனர்.
நடிகை தபு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். தற்போது இந்தி மறுபதிப்பை சீனமொழியில் வெளியிட உள்ளனர்.
இம்மாத கடைசியில் சீனாவில் உள்ள திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்க்க இயலும்.

