தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எனக்கு அப்பாதான் எல்லாம்: நெகிழ வைத்த பிரசாந்த்

1 mins read
a3fe93fc-2a09-40ba-9027-6f4a964e9a57
-

நடி­கர் பிர­சாந்த் தன் தந்தை தியா­க­ரா­ஜன் வைத்­துள்ள பாச­மும் நம்­பிக்­கை­யும் அலா­தி­யா­னது எனப் பாராட்­டு­கி­றார் இயக்­கு­நர் ஏ.வெங்­க­டேஷ்.

அண்­மை­யில் தனது பிறந்­த­நாளைக் கொண்­டா­டி­னார் பிர­சாந்த். அந்த நிகழ்­வில் இயக்­கு­நர்­கள் ஆர்.கே.செல்­வ­மணி, சுரேஷ் காமாட்சி உள்­ளிட்ட பலர் கலந்து கொண்டு அவரை வாழ்த்­திப் பேசி­னார்.

அப்­போது ஏ.வெங்­க­டேஷ் தாம் வெளிப்­ப­டை­யாக சில விஷ­யங்­க­ளைப் பேச விரும்­பு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"நான் பிர­சாந்த் சாரு­டன் 'சாக்­லெட்' என்ற ஒரு படத்­தில் மட்­டும்­தான் பணி புரிந்­தேன். ஆனால் பல படங்­களில் பணி­பு­ரிந்த அள­விற்கு எங்­க­ளி­டம் நல்ல பழக்­க­மும் நல்ல புரி­த­லும் தொடர் நட்­பும் உள்­ளது. அன்று முதல் அவ­ரு­டன் நான் தொடர்ந்து பய­ணம் செய்­கி­றேன்.

"பிர­சாந்­தைக் கெடுப்­பதே அவ­ரது அப்­பா­தான் என்று திரை­யு­ல­கில் ஒரு பேச்சு உள்­ளது. என்­னி­டம் பலர் நேரி­லேயே கூறியுள்ளனர். இது­பற்றி பிர­சாந்­தி­டம் கேட்­ட­போது, அவர் கூறி­யது ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது.

"எந்­தத் தந்­தை­யா­வது தன் மகன் வாழ்க்­கை­யைக் கெடுக்க விரும்­பு­வாரா? அவ­ரின் வளர்ச்­சிக்கு இடை­யூறு செய்­வாரா? எனக்கு என் அப்­பா­தான் எல்­லாம். அவர் இல்லை என்­றால் நான் இந்த அளவு முன்­னேறி இருக்க முடி­யாது என்­றார். அந்த நொடியே அவர் மீதான மதிப்பு மேலும் அதி­க­ரித்­தது," என்­றார் வெங்­க­டேஷ்.