திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read

 லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது 'வாரியர். இந்தப் படத்தில் சிம்பு ஒரு பாடலைப் பாடி உள்ளார்.

கொரோனா நெருக்கடிக்கு முன்பே லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க ஒரு கோடி ரூபாய் முன்பணம் பெற்றிருந்தார் சிம்பு.

ஆனால் பட வேலைகளை திட்டமிட்டபடி தொடங்க முடியவில்லை. இந்நிலையில், 'வாரியர்' படத்தில் பாட முடியுமா என்று லிங்குசாமி கேட்க, "இதோ வருகிறேன் சார்," என்று ஓடோடிச் சென்று பாடிக்கொடுத்துள்ளார் சிம்பு.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்தப் பாடலை விரைவில் இணையத்தில் வெளியிட உள்ளனர்.

 'வலிமை' படத்தில் அருமையாக நடித்து அஜித் ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதித்த நடிகர் கார்த்திகேயா (படம்) மீண்டும் நாயகனாக நடிக்க உள்ளார்.

ஏற்கெனவே தெலுங்கில் நாயகனாக நடித்து வந்த இவர், அஜித் படம் என்பதால் வில்ல னாக நடித்தார். இந்நிலையில், பிரசாந்த் ஷெட்டி இயக்கும் படத்தில் நாயகனாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐஸ்வர்யா மேனன் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தில் அடிதடிக் காட்சிகள் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 தயாரிப்பாளரும் இயக்கு நருமான பாபா விக்ரம் நெல்லையில் நேற்று முன் தினம் மாரடைப்பால் காலமா னார். அவருக்கு வயது 83. முன்னாள் முதல்வர் கருணாநிதி கதை, திரைக் கதை, வசனம் எழுதிய 'கலைஞரின் கண்ணம்மா' என்ற படத்தை இயக்கி, தயாரித்தவர் பாபா விக்ரம். இந்தப் படத்தில் மீனா நாயகியாக நடித்திருந்தார்.

'என் இதய ராணி', 'பொம்மை நாய்கள்' உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்து இயக்கி உள்ள அவர், கடைசியாக இமான் அண்ணாச்சி நாயகனாக நடிக்கும் 'அதிர்ஷ்டம்' என்ற படத்தை இயக்கி வந்தார்.

இந்நிலையில், பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த அவர், ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள தனது வீட்டில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 'பீஸ்ட்' படத்துக்கு குவைத் நாடு தடைவிதித்துள்ளது. இஸ்லாமியர்களை பயங்கர வாதிகள் போல் சித்திரித்து இருப்பதாலும் வன்முறைக் காட்சிகள் அதிகம் என்பதாலும் தடைவிதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதே காரணங்களுக்காக கத்தார் நாட்டிலும் இந்தப் படத்துக்கு தடை விதித்துள்ளனர்.

எனினும், இந்த நடவடிக்கைகள் காரணமாக படத்தின் ஒட்டுமொத்த வசூல் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என படத்தயாரிப்புத் தரப்பில் கூறப்படுகிறது.

'பீஸ்ட்' படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியீடு காண்கிறது.