அஜித்தைப் புகழும் விமானப் பணிப்பெண்

அஜித்தைப் புகழும் விமானப் பணிப்பெண்

1 mins read
bcf75f35-a897-4869-9d6e-9ae75aaddaf2
-

அஜித்தைப் போல் எளி­மை­யான நாய­கனைப் பார்ப்­பது கடி­னம் என்­கி­றார் விமா­னப் பணிப்­பெண் கன்­னிகா பிரபா­கர்.

அண்­மை­யில் சென்­னை­யில் இருந்து தனி விமா­னம் மூலம் ஹைத­ரா­பாத் சென்­றி­ருந்­தார் அஜித். அந்த விமா­னத்­தில் கன்­னிகாதான் அன்றைய தினம் விமானப் பணிப்­பெண்ணாம்.

"பய­ணம் முழு­வ­தும் அவ­ரது எளி­மையை ரசித்­தேன். அவ­ரது மென்­மை­யான சிரிப்பு, பழ­கும் ­வி­தம் ஆகி­யவை வியப்­பில் ஆழ்த்­தின," என்று சமூக ஊட­கத்­தில் பதிவிட்­டுள்­ளார் கன்­னிகா.

மேலும் பயணத்தின் முடிவில் தாம் அஜித்­து­டன் எடுத்­துக்­கொண்ட புகைப்­ப­டத்­தை­யும் அவர் பகிர்ந்­துள்­ளார்.

இந்தப் படத்தை அஜித் ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் இப்போது பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.