இந்தியத் திரையுலகில் தென்னிந்தியாவின் ஆதிக்கம்

இந்தியத் திரையுலகில் தென்னிந்தியாவின் ஆதிக்கம்

2 mins read
457b4c48-38ed-4fb7-9e22-dc870ff2c543
'மாஸ்டர்' படத்தின் ஒரு காட்சியில் விஜய் சேதுபதி, விஜய். -

கடந்த ஆண்டு இந்­தி­யத் திரை­ உ­ல­கில் தென்­னிந்­தியப் படங்­கள்­தான் ஆதிக்­கம் செலுத்தி உள்­ளன.

கடந்த ஆண்டு இந்­தி­யா­வின் ஒட்­டு­மொத்த பொழு­து­போக்கு ஊட­கத்­து­றை­யின் வரு­மா­னத்­தில் தென்­னிந்­தி­யா­வின் பங்­க­ளிப்பு மட்­டும் 30 விழுக்­காடு எனத் தெரி­ய­ வந்துள்­ளது. மேலும், ஒப்­பீட்டு அள­வில் அதி­க­மான வெற்­றிப் படங்­களைத் தந்­தி­ருப்­ப­தும் தென்­னிந்­திய திரை­யு­ல­கம்­தான்.

விமர்­சன, வசூல் ரீதி­யில் இப்­படங்­கள் சாதித்­ததை அடுத்து, அவற்­றுள் பல, இந்தி உள்­ளிட்ட பல்­வேறு இந்­திய மொழி­களில் மறு­ப­திப்பு செய்­யப்­ப­டு­கின்­றன.

2021ல் இந்­தி­யா­வில் வெளி­யீடு கண்ட திரைப்­ப­டங்­களில் சரி­பாதி தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம், கன்­ன­டம் ஆகிய நான்கு தென்­னிந்­திய மொழி­களில் வெளி வந்தவை­யா­கும்.

"மின்­னி­லக்க ஊட­க­மும் தென்­னிந்­தி­யா­வில் வேக­மாக வளர்ச்சி கண்டு வரு­கிறது. வரும் ஆண்­டு­களில் இந்த வளர்ச்சி விகி­த­மானது 25% இருக்­கும் எனக் கணிக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே, ஓடிடி தளங்­க­ளின் வளர்ச்­சி­யும் புயல் வேகத்­தில் இருக்­கும். படைப்­பு­க­ளின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கும்," என்று சென்னை­யில் நடை­பெற்ற இந்­திய தொழில்­கூட்­ட­மைப்­பின் மாநாட்­டில் வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"கொரோனா நெருக்­கடி வேளை­யில் வெளி­யீடு கண்ட இந்­திப் படங்­கள் பல­வும் வசூ­லில் சாதிக்­க­வில்லை. வெற்றி பெற்ற படங்­களின் எண்­ணிக்கை குறை­வா­கவே இருந்­தன.

"ஆனால் தமி­ழில் வெளி­யான விஜய்­யின் 'மாஸ்­டர்' உள்­ளிட்ட படங்­கள் சாதித்­தன. இத்­த­னைக்­கும் 'மாஸ்­டர்' வெளி­யா­ன­போது தமி­ழ­கத் திரை­ய­ரங்­கு­களில் 50% இருக்­கை­களை நிரப்ப மட்­டுமே அரசு அனு­மதி அளித்­தி­ருந்­தது.

"மலை­யா­ளத்­தில் ஓடிடி தளங்­களில் வெளி­யி­டு­வ­தற்­கென்றே ஏரா­ள­மான படங்­கள் தயா­ரிக்­கப்­பட்­டன. நான்கு கோடி ரூபா­யில் ஒரு படத்தை தயா­ரித்து, வெளி­யீட்டு உரி­மையை குறைந்­த­பட்ச லாபத்­துக்கு விற்­பனை செய்­யும் போக்கு அங்கு அதி­க­ரித்துள்ளது.

"தென்­னிந்­திய பொழு­து­போக்குத் துறை­யின் வரு­மா­னத்­தில் சுமார் 35% சின்­னத்­திரை மூலம் கிடைத்து வரு­கிறது. அதன் ஆதிக்­கம் அதி­க­ரித்து வரும் நிலை­யில், அடுத்த சில ஆண்­டு­களில் வரு­மான விகிதம் மேலும் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.