'தனுஷுடன் நடிக்க ஆசை'

'தனுஷுடன் நடிக்க ஆசை'

3 mins read
e57deb33-7680-42e1-a001-9f15fd0b4814
-

'மன்­ம­த­லீலை' படத்­தின் மூலம் இளை­யர்­க­ளைத் தன் பக்­கம் திரும்­பிப்­பார்க்க வைத்­துள்­ளார் இளம் நாயகி ஸ்ம்­ருதி வெங்­கட். கவர்ச்­சி­யான பார்வை, நையாண்டி வச­னங்­கள், இளம் பெண்­ணுக்கே உரிய சேட்­டை­கள் என ஸ்ம்­ருதி தன் பங்­க­ளிப்பை சிறப்­பாக வழங்கி உள்­ளார்.

ஸ்ம்­ருதி அச்சு அசல் தமிழ்ப்­பெண். பெற்­றோ­ருக்கு சொந்த ஊர் திரு­நெல்­வேலி. ஆனால் இவர் பிறந்து வளர்ந்­தது எல்­லாம் சென்னை.

பட்ட மேற்­ப­டிப்பு முடித்த பிற­கு­தான் சினிமா பக்­கம் பார்வை திரும்­பி­ய­தாம். முன்­ன­தாக சில விளம்­ப­ரங்­களில் தலை­காட்டி உள்­ளார்.

"சிறு வய­தில் இருந்தே சினிமா, கேமரா மீதான ஆர்­வம் அதி­கம். வீட்­டில் சாதா­ர­ண­மாக புகைப்­ப­டம் எடுத்­தா­லும் அதற்­காக அழ­காக 'போஸ்' கொடுப்­பேன் என்று அம்மா அடிக்­க­டி சொல்­வார். மூன்று வய­தில் தொடங்­கிய அந்த ஆர்­வம்­தான் இப்­போது வெள்­ளித்­திரை நடி­கை­யாக கேமரா முன்­னர் நிற்க வைத்­துள்­ளது," என்று 'ஃபிளாஷ்­பேக்' சென்று திரும்­பு­கி­றார் ஸ்ம்­ருதி.

கல்­லூ­ரி­யில் படித்­துக்கொண்­டி­ருந்­த­போதே 'முண்­டா­சுப்­பட்டி' பட வாய்ப்பு தேடி­வந்­துள்­ளது. ஆனால் பெற்­றோர் தரப்­பில் இதற்கு வர­வேற்பு இல்­லை­யாம். படிக்­கும்­போது முழுக்­க­வ­ன­மும் அதில்­தான் இருக்க வேண்­டும் என்று கறா­ரா­கக் கூறி­யுள்­ள­னர்.

சமர்த்­துப் பெண்­ணான ஸ்ம்­ரு­தி­யும் அந்­தப் படத்­துக்­கான நடிப்­புத் தேர்­வுக்­குப் போக­வில்லை. அதன் பிறகு உற­வி­னர் ஒரு­வர் 'தடம்' படத்­திற்கு புது நாய­கியை படக்­குழு தேடிக்­கொண்­டி­ருப்­ப­தா­கத் தக­வல் தெரி­வித்­துள்­ளார்.

"இந்த முறை வீட்­டில் பெரிய எதிர்ப்பு இல்லை. நடிப்­புத் தேர்­வில் தேர்ச்சி பெற்­றதை அடுத்து அந்­தப் படத்­தில் ஒப்­பந்­தம் செய்­த­னர். அதன் பிறகு வரி­சை­யா­கப் பட வாய்ப்­பு­கள் தேடி வந்­தன. இப்­போது, 'மாறன்', 'மன்­ம­த­லீலை' வரை எந்­தச் சிக்­க­லும் இல்­லா­மல் என் திரைப்­ப­ய­ணம் போய்க்­கொண்­டி­ருக்­கிறது.

தேசிய விருது பெற்ற நடி­கர் தனுஷ் என்ன அறி­வுரை தந்­தார்?

"விஜய் சார் தொடங்கி, தனுஷ், அசோக் செல்­வன் வரை எல்லா நாய­கர்­க­ளுமே அரு­மை­யாக நடிக்­கக்­கூ­டி­ய­வர்­கள். அவர்­கள் அனை­வ­ருமே எனக்கு நல்ல அறி­வு­ரை­களை வழங்கி உள்­ள­னர்.

"தனு­ஷைப் பொறுத்­த­வரை, 'நாம் திரை­யில் காட்சி தரும் ஒவ்­வொரு நொடி­யை­யும் நன்­றா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்' என்­பார். மற்­ற­வர்­களும் நல்ல அறி­வு­ரை­கள் தந்­துள்­ளனர். அதை­விட முக்­கி­யம், முன்­னணி நடி­கர்­கள் நம்­மு­டன் பேசு­வார்­களா என்று சந்­தே­கப்­பட்­டேன். ஆனால் விஜய், தனுஷ் போன்ற பெரிய நட்­சத்­தி­ரங்­கள் எந்­த­வித பந்­தா­வும் இல்­லா­மல் அன்­பா­கப் பேசி­னர். அதை நினைத்­தால் வியப்­பா­க­வும் மகிழ்ச்­சி­யா­க­வும் உள்­ளது," என்று சொல்­லும் ஸ்ம்­ரு­தி­யின் கைவ­சம் அரை டஜன் படங்­கள் உள்­ளன.

விக்­ரம் பிர­பு­வு­டன் 'பகையே காத்­திரு' படத்­தில் மருத்­துவ மாண­வி­யாக நடிக்­கி­றார். வெற்­றி­யு­டன் ஒரு படம், அருள்­நி­தி­யு­டன் 'தேஜாவு' உள்­ளிட்ட படங்­களில் ஸ்ம்­ரு­தி­யைப் பார்க்க முடி­யும்.

'ஓ பேபி' படத்­தில் சமந்தா ஏற்­றி­ருந்த வேடம் ரொம்­பப் பிடிக்­கும். அது­தான் தமது கன­வுக் கதா­பாத்­தி­ரம் என்­ப­வ­ருக்கு, இளம் நாய­கர்­கள் அனை­வ­ரை­யும் பிடிக்­கு­மாம்.

"பிடித்த நடி­கர்­க­ளின் பட்­டி­யல் அவ்­வப்­போது மாறிக்­கொண்டே இருக்­கும். இப்­போ­தைக்கு துருவ் விக்­ரம்­தான் என் பட்­டி­ய­லில் முத­லி­டத்­தில் உள்­ளார். அவ­ரு­டன் ஒரு படத்­தில் இணைந்து நடிக்க ஆசை," என்­கி­றார் ஸ்ம்­ருதி.

வெங்­கட் பிரபு படத்­தில் நடித்த அனு­ப­வம் குறித்து?

"அதை மிக ஜாலி­யான உற்­சா­கம் நிறைந்த அனு­ப­வம் என்­பேன். வெங்­கட் சார் எப்­ப­டிப்­பட்­ட­வர் என்­றும் அவ­ரது படங்­கள் எப்­படி இருக்­கும் என்­ப­தும் அனை­வ­ருக்­கும் தெரி­யும்.

"படப்­பி­டிப்­பின்­போது ஏதா­வது நகைச்­சு­வையைச் சொல்லி சிரிக்க வைத்­துக்­கொண்டே இருப்­பார். அவ­ரது இயக்­கத்­தில் நடிக்க வேண்­டும் என்­பது நீண்ட நாள் ஆசை. அது இப்­போது நிறை­வே­றி­ய­தில் மகிழ்ச்சி," என்­கி­றார் ஸ்ம்­ருதி.

, :   