நல்ல கதையும் கதைக்களமும் கொண்ட படங்களைத் தயாரித்து வருகிறது நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம். அதன் அடுத்த வெளியீடு 'ஓ மை டாக்'.
நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்ணவ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு அண்மையில் வெளியானது. சூர்யாவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட அத்தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஒரு சிறுவனுக்கும் நாய்க்கும் இடையேயான இணைபிரியா பயணத்தை விவரிக்கிறது இப்படம். கூடவே தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவையும் அழுத்தமாகப் பதிவு செய்யுமாம்.
முன்னோட்டக் காட்சித் தொகுப்பில் அருண் விஜய், அர்ணவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே உள்ளன. வரும் 21ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது இப்படம்.

