அஜித் படத்தில் பணியாற்றும் விஜய்

அஜித் படத்தில் பணியாற்றும் விஜய்

2 mins read
9d659767-bdd1-44e5-bd69-1701b7aaa0c1
-

அஜித் படத்­தில் விஜய் பணி­யாற்­று­கி­றார் என்று சமூக ஊட­கங்­களில் ஒரு தக­வல் பர­வி­ய­துமே, இரு­வ­ரது ரசி­கர்­கள் மத்­தி­யி­லும் பர­ப­ரப்­பும் எதிர்­பார்ப்­பு­களும் அதி­க­ரித்­து­விட்­டன.

'வலிமை' படத்­தின் வெற்­றியை அடுத்து தனது அடுத்த படத்­தில் அஜித் கவ­னம் செலுத்தி வரு­கி­றார்.

இந்­தப் புதிய படத்­தி­லும் சமூக அக்­க­றை­யு­டன் கூடிய ஒரு நல்ல தக­வ­லைச் சொல்­லப்­போ­கி­றா­ராம் இயக்­கு­நர் ஹெச்.வினோத்.

படத்­துக்கு இன்­னும் தலைப்பு வைக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தால் 'ஏகே 61' என்று தற்­கா­லி­க­மாக குறிப்­பி­டு­கின்­ற­னர். முதற்­கட்ட படப்­பி­டிப்பு ஹைத­ரா­பாத்­தில் உள்ள ராமோ­ஜி­ராவ் திரைப்­பட நக­ரில் நடை­பெ­று­கிறது.

சென்னை அண்­ணா­சா­லை­யில் உள்ள ஜெமினி மேம்­பா­லத்­தைப்­போல் பிர­ம்மாண்­ட­மான அரங்கு அமைக்­கப்­பட்டு, முக்­கிய காட்­சி­கள் பட­மாக்­கப்­பட்டு வரு­கின்றன.

இந்­தப் படத்­தில் மீண்­டும் எதிர்­மறை வேடத்­தில் நடிக்க உள்­ளா­ராம் அஜித். ஆனால் கொடூர, வில்­லத்­த­னம் ஏதும் பண்­ண­மாட்­டார்.

"வங்­கிக் கொள்­ளைச் சம்­ப­வம், அதில் சம்­பந்­தப்­பட்ட கொள்­ளை­யர்­கள், அவர்­களை வழி­ந­டத்­தும் ஒரு தலை­வன் என்று கதை நக­ரும். சூர்யா­வின் 'அயன்' படத்­தில் அவர் பல்­வேறு தோற்­றங்­க­ளு­டன் ஒரு பாட­லில் நடித்­தி­ருப்­பார். அது­போன்று 'ஏகே 61' படத்தில், அஜித்­தும் பல தோற்­றங்­களில் நடிக்க உள்­ளார்.

"அஜித் ஜோடி­யாக இந்தி நடிகை தபு நடிப்­பார் என்று வெளி­யான தகவலை படக்­கு­ழு­வி­னர் மறுத்­துள்­ள­னர். கதா­நா­யகி யார் என்­பதை இன்னும் முடிவு செய்­ய­வில்லை. அநே­க­மாக அஜித்­து­டன் ஏற்­கெ­னவே நடித்த ஒரு­வரை மீண்­டும் ஒப்­பந்­தம் செய்ய அதிக வாய்ப்­புள்­ளது," என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப் புள்­ளி­கள்.

மற்­ற­படி, தொழில்­நுட்­பக் குழு­வில் பெரிய மாற்­றங்­கள் இல்லை. வலி­மை­யில் பணி­யாற்­றிய நீரவ் ஷா ஒளிப்­ப­தி­வைக் கனிக்க ஜிப்­ரான் இசை­ய­மைத்­துள்­ளார். சரி, இப்படத்­தில் விஜய் என்ன செய்­யப்போகிறார்?

"இதற்கு முன்பு 'வலிமை'யில் படத்­தொ­குப்பு பணிமை மேற்­கொ்­ண­ட­வர் விஜய் வேலுக்­குட்டி. மூன்று மணி நேரம் ஓடக்­கூ­டிய படத்தை எந்த இடத்தி­லும் தொய்வு ஏற்­ப­டா­மல் அவர் பணி­யாற்­றிய விதம் அஜித்­துக்கு மிகவும் பிடித்­துப்போன­தாம்.

அதனால் 'ஏகே 61' படத்திலும் விஜய் வேலுக்குட்டிதான் எடிட்டர்.