'ஆவலோடு காத்திருந்தேன்'

'ஆவலோடு காத்திருந்தேன்'

3 mins read

கல்­லூரி நாள்­களில் பெரிய பாட­கி­யாக வேண்­டும் எனும் ஆசை­தான் தமக்கு இருந்­தது என்­றும் காலம் தம்மை நடி­கை­யாக மாற்­றி­விட்டது என்­றும் நடிகை ஆண்ட்­ரியா தெரி­வித்­துள்­ளார்.

குறிப்­பிட்ட வய­தில் திரு­ம­ணம் செய்­து­கொள்ள வேண்­டும் என்று ஒரு­த­ரப்­பி­னர் கூறு­வதை தம்­மால் ஏற்­றுக்­கொள்ள இயலாது என்­றும் தனக்கு ஏற்ற ஒரு­வரைச் சந்­திக்­கும் வரை தாம் காத்தி­ருக்­கப் போவ­தா­க­வும் அவர் பேட்டி ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"எந்­தப் பக்­கம் திரும்­பி­னா­லும், எப்­போது திரு­ம­ணம் என்ற கேள்வி தவ­றா­மல் கேட்­கப்­ப­டு­கிறது. எனக்கு நானே இந்­தக் கேள்­வியை எழுப்­பிக்கொள்­கி­றேன். இது­வரை, என்­னைத் திருமணம் செய்துகொள்­கி­றாயா? என்று யாரும் கேட்­க­வில்லை.

"குறிப்­பிட்ட வய­துக்­குள் திரு­ம­ணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறு­ப­வர்­க­ளுக்­காக நான் அதைச் செய்ய விரும்­ப­வில்லை.

"ஒரு­வ­ரு­டன் வாழ்க்­கை­யில் இணை­யப் போகி­றோம் என்­றால், அதற்கு தகு­தி­யா­ன­வர்­க­ளாக இரு­வ­ரும் இருக்க வேண்­டும். எனது கண­வர் என்­ப­வர் மதிப்பு உள்­ள­வ­ராக இருத்­தல் அவ­சி­யம். அது­தான் முக்­கி­யம் என நினைக்­கி­றேன்," என்­கிறார் ஆண்ட்­ரியா.

விஜய் சேது­ப­தி­யு­டன் இணைந்து நடித்­ததை மிகப்­பெ­ரிய வாய்ப்­பாகக் கருது­வ­தா­கச் சொல்­பவர், நட்­சத்­திர கலை­ஞ­ராக வளர்ந்­து­விட்ட போதி­லும், நல்ல கதை­க­ளுக்­காக சிறிய வேடங்­களில் சேது­பதி நடிப்­பதைப் பாராட்ட வார்த்தை­களே இல்லை என்­கி­றார்.

"எவ்­வ­ளவு சிறிய கதா­பாத்­தி­ர­மாக இருந்­தா­லும் அற்­பு­த­மாக நடித்து பெய­ரெ­டுக்­கி­றார் சேது­பதி. எனது படத்­தில் அவர் அது­போன்று நடித்­தி­ருப்­ப­தற்கு நன்றி தெரி­வித்து அவ­ருக்கு கைபே­சி­யில் குறுந்­த­க­வல் அனுப்­பி­னேன். ஆனால் அவர் அதை­யெல்­லாம் எதிர்­பார்ப்­பதே இல்லை.

"முன்பு 'வட­சென்னை' படத்­தில் ராஜன் கதா­பாத்­தி­ரத்­தில் விஜய் சேது­ப­தி­தான் நடிப்­ப­தாக இருந்­தது. அவ­ரு­டன் தொடர்ந்து இணைந்து நடிக்க விரும்­பு­கி­றேன்.

"அதற்­கா­கக் காத்­தி­ருப்­ப­தாக அவ­ரி­டம் கூறி­யுள்­ளேன்," என்று சொல்­லும் ஆண்ட்ரியா, 'பிசாசு-2' படம் தம்மை திரை­யு­ல­கப் பயணத்­தின் அடுத்த கட்­டத்­துக்குக் கொண்டு செல்­லும் என்­கி­றார்.

அந்­தப் படத்­தின் இயக்­கு­நர் மிஷ்­கின் மீது தாம் வைத்­தி­ருந்த நம்­பிக்கை­தான் அப்­ப­டத்­தில் தம்மை நடிக்க வைத்­த­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், மிஷ்­கினி­டம் இருந்து நிறைய விஷ­யங்­க­ளைக் கற்­றுக் கொண்­ட­தா­கச் சொல்­கி­றார்.

கொரோனா நெருக்­கடி வேளை­யில் மற்­ற­வர்­க­ளைப் போலவே தாமும் வீட்­டில் முடங்க நேரிட்­ட­தா­க­வும் மீண்­டும் திரை­யு­ல­கம் இயங்­கத் தொடங்­கி­ய­தும் நடிப்­பில் வெறித்­த­ன­மாக ஈடு­பட்­ட­தா­க­வும் பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார் ஆண்ட்­ரியா.

"உண்­மை­தான்... வெறி­யு­டன்­தான் காத்­தி­ருந்தேன். நடிப்பை அந்த அள­வுக்கு நேசிக்­கத் தொடங்கி இருப்­பதை என்­னால் உணர முடி­கிறது.

"பெரிய இயக்­கு­நர்­க­ளின் படங்­களில் முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரம் என்­றால் ஆண்ட்­ரியா தான் ஒப்­பந்­த­மா­கி­றார் என்­கி­றார்­கள்.

"இதற்­கான கார­ணத்தை நான் எப்­ப­டிச் சொல்ல முடி­யும். இது இயக்­கு­நர்­க­ளி­டம் கேட்­கப்­பட வேண்டிய கேள்வி. பொது­வாக திரை­யு­ல­கைப் பொறுத்­த­வரை ஒரு நடி­கை­யின் கால்­ஷீட் கிடைக்­க­வில்லை என்­றால் மற்­றொரு நடிகை என்று போய்க்­கொண்டே இருப்­பார்­கள்.

"அப்­ப­டிப்­பட்ட ஒரு துறை­யில் ஆண்ட்­ரி­யா­வால் தான் இந்­தக் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க முடி­யும்.

"அவர்­தான் பொருத்­த­மாக இருப்­பார் என்று இயக்­கு­நர்­கள் முடி­வெ­டுப்­பது எனக்கு மகிழ்ச்சி­யைத் தரு­கிறது. என் மீதான எனது நம்­பிக்கை மெல்ல அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது," என்­கி­றார் ஆண்ட்­ரியா.

'பிசாசு-2' படத்­துக்­காக இவ­ருக்­குப் பல விரு­து­கள் கிடைக்­கும் என்­கின்­ற­னர் படக்­கு­ழு­வி­னர்.

"நானும் மிஷ்­கி­னும் படப்­பிடிப்­பின்­போது நிறைய சண்டை­கள் போட்­டி­ருக்­கி­றோம்.

"ஆனால் அவற்றை எல்­லாம் கடந்து ஒரு­வர் மீது மற்­றொ­ரு­வர் நிறைய மரி­யாதை வைத்­தி­ருக்­கி­றோம்.

"இந்த மோதல் தொழில் சார்ந்­தது. தனிப்­பட்ட வகை­யில் ஏது­மில்லை. எனது சந்­தே­கங்­கள், கேள்­வி­க­ளுக்கு உரிய பதில் கிடைத்­து­விட்­டால் நூறு விழுக்­காட்­டுக்­கும் மேலாக உழைப்­பேன். இல்லை­யெ­னில் மோதல்­தான்.

"இவை அனைத்துக்குமே ஒரு படைப்பு மிகச் சிறப்பான தாக இருக்க வேண்டும் எனும் அக்கறைதான் காரணம். இதில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு என்பதெல்லாம் இல்லை. சினிமாவவை முன்னைவிட அதிகம் நேசிக்கிறேன்," என்று சொல்­லிச் சிரிக்கி­றார் ஆண்ட்­ரியா.

, :

 



ஆண்ட்ரியா