'கிராமத்தைத் தேடிவரும் இளைஞனின் கதை'

'கிராமத்தைத் தேடிவரும் இளைஞனின் கதை'

2 mins read

ஹேமந்த் இயக்­கத்­தில் 'காரி' என்ற தலைப்­பில் உரு­வா­கும் படத்­தில் நாய­க­னாக நடிக்­கி­றார் சசி­கு­மார்.

மண்­ணின் வாச­மும் மனி­த­னின் சாய­லும் கொண்­ட­தாக தமது படைப்பு இருக்க வேண்­டும் என்­கி­றார் இந்த அறி­முக இயக்­கு­நர்.

இதில் நக­ரத்­தில் வசிக்­கும் நாய­கன் கிரா­மத்­தைத் தேடி வரு­கிறான். அங்கு எதிர்­கொள்­ளும் அனு­ப­வங்­கள்­தான் கதை என்­றும் சொல்கிறார்.

"நாய­கன் நக­ரத்­தில்­தான் இருக்­கி­றான். திடீ­ரென ஒரு கிரா­மத்­திற்­குச் செல்ல வேண்­டிய சூழல் ஏற்­ப­டு­கிறது. நம் வேர்­களை இழந்து விட்­டுத்­தான் நாம் நகர்ப்­பு­றங்­க­ளுக்கு வந்­தி­ருக்­கி­றோம்.

"நிஜ­மான கிரா­மம் இன்­ன­மும் வெளியே வர­வில்லை. இத்­த­கைய சூழலை திரை­யில் கதை சொல்­லும் பட­மாக இது இருக்­கும். புது மழை பெய்த மாதிரி வாச­னையை படம் பார்க்­கும்­போதே ரசி­கர்­கள் உணர வேண்­டும்.

"எனது கதை நாய­கன் ஒரு கிரா­மத்­திற்­குள் நுழைந்து நல்ல மாற்­றங்­க­ளுக்­குக் கார­ண­மா­கி­றான். ரத்­த­மும் சதை­யு­மாக ஒரு கதை­யைச் சொல்ல முயற்சி எடுத்­துள்­ளேன். கிரா­மத்­தில் உள்­ள­வர்­கள், வெளி­யே­றி­ய­வர்­கள் எனப் பல­ரும் இந்­தக் கதை­யில் வரு­வார்­கள்.

"சசி­கு­மா­ரைப் பொறுத்­த­வ­ரை­யில் படம் இயல்­பாக நகர்­வ­தற்­குத் தேவை­யான நடிப்பை வழங்கி உள்­ளார்.

"இந்­தப் படத்­தில் நாங்­கள் எதை­யும் போதிக்­க­வில்லை. ஆனால் நல்ல விஷ­யங்­களை முழக்­க­மாக இல்­லா­மல், விதைத்­தி­ருக்­கி­றோம். அப்­ப­டி­யான இடங்­களில் சசி­கு­மார் நிதா­ன­மும் கூர்மை­யு­மாக நடித்­தி­ருக்­கி­றார்.

"கதை­யின் நாயகி பார்­வதி அருண். தெலுங்­கி­லும் மலை­யா­ளத்­தி­லும் நடித்த அனு­ப­வம் உள்­ள­வர். இப்­போது தமி­ழில் அறி­மு­க­மா­கி­றார். பல உய­ரங்­க­ளைத் தொடு ­வ­தற்­கான திற­மை­யும் உழைப்பும் அவ­ரி­டம் உள்­ளது.

"கிங்ஸ்லி சென்­னை­யி­லி­ருந்து கிரா­மம் வரை சசி­கு­மா­ரைப் பின்­தொ­டர்­கி­றார். இது­வரை நகைச்­சுவை நடி­க­ராக மட்­டுமே அவ­ரைப் பார்த்­த­வர்­கள், இனி குணச்­சித்­திர பாத்­தி­ரங்­க­ளி­லும் பார்க்க முடி­யும். இயக்­கு­நர் பாலாஜி சக்­தி­வேல் தனக்­குள் இருக்­கும் நடி­கரை முழுமை­யாக வெளிப்­ப­டுத்தி உள்ளார்.

ஆடு­க­ளம் நரேன், ஜேடி சக்­க­ர­வர்த்தி ஆகி­யோ­ரும் இப்­ப­டத்­தில் நடித்­தி­ருக்­கி­றார்­கள். சில உண்மை நிகழ்­வு­க­ளை­யும் அசல் மனி­தர்­களை­யும் இதில் நீங்­கள் பார்க்க முடி­யும்," என்று எதிர்­பார்ப்­பு­களை எகி­றச் செய்­கி­றார் இயக்­கு­நர் ஹேமந்த். 'காரி' படத்­துக்கு இசை அமைப்­பவர் டி.இமான். அனைத்­துப் பாடல்­களும் மிக இனி­மை­யாக உள்­ள­ன­வாம். கணேஷ் சந்­திரா ஒளிப்­ப­திவு செய்ய லட்­சு­மண்­கு­மார் தயாரிக்கிறார்.