'பீஸ்ட்' படத்தின் வசூல், விஜய்யின் முந்தைய படங்களின் வசூலை முந்திவிட்டதாக அப்படக் குழுவினர் தெரிவித்துள்ள னர். சென்னையில் மட்டும் முதல் நாள் அன்று சுமார் இரண்டு கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளதாம்.
படம் குறித்து கலவை யான விமர்சனங்கள் வெளியான போதிலும், பல நாடுகளில் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் படத்தை திரையரங்குக்குச் சென்று பார்த்து வருகிறார்கள்.
இலங்கையில் கடும் பொருளியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும், அங்குள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் திரண்டு வந்து 'பீஸ்ட்' படத்தைப் பார்த்துள்ளனர்.

