'சூப்பர் சிங்கர்' தொலைக் காட்சி நிகழ்ச்சி மூலம் இசைப் பிரியர்களின் மனதைக் கவர்ந்தவர் இளம் பாடகி பிரியங்கா (படம்). தற்போது உலகம் முழுவதும் இசைக்கச்சேரி
களை நடத்தி வருகிறார். இன்ஸ்டகிராமில் மட்டும் பிரியங்காவை சுமார் 1.1 மில்லியன் பேர் பின்தொடர் கின்றனர். இந்நிலையில் பிரியங்கா திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மைக் காலமாக அவர் தனது புகைப்படங் களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார். அவற்றில் அவர் அழகாகக் காட்சி அளிப்பதாகவும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

