வசூல், வரவேற்பு நிலவரங்கள்

வசூல், வரவேற்பு நிலவரங்கள்

3 mins read
f940d513-0366-46c1-abda-42484af9139e
-

'வலிமை', 'பீஸ்ட்', 'கேஜி­எஃப்' என்று அடுத்­த­டுத்து பிரம்­மாண்­ட படங்­கள் வெளி­யீடு கண்டு வரு­வ­தால் சினிமா ரசி­கர்­கள் தொடர் கொண்­டாட்­டத்­தில் உள்­ள­னர்.

இணை­யத்­த­ளங்­கள், சமூக ஊட­கங்­கள் என அனைத்­தி­லும் இந்த மூன்று படங்­க­ளின் விமர்­ச­னம், வசூல் நில­வ­ரம் ஆகி­யவை குறித்த தக­வல்­கள் தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றன.

எந்­தப் படம் அதி­கம் வசூல் கண்­டுள்­ளது என்­பது தொடர்­பாக இணை­ய­வா­சி­கள் நடத்தி வரும் வார்த்­தைப் போரும் மோதலும் திகில் படத்­தை­விட அதிக பயத்­தை­யும் கவலை­யை­யும் தரு­கிறது.

'வலிமை' படத்­தின் வசூல் அது வெளி­யான சில தினங்­க­ளி­லேயே இரு­நூறு கோடி ரூபாயை கடந்­து­விட்­டது என்­ப­தாக அதன் தயா­ரிப்­பா­ளர் போனி­க­பூர் தெரி­வித்­தி­ருந்­தார். அடுத்து விஜய் நடித்த 'பீஸ்ட்' படம் இந்த வசூலை முறி­ய­டிக்­குமா என்ற எதிர்­பார்ப்பு அவ­ரது ரசி­கர்­கள் மத்­தி­யில் அள­வுக்கு அதி­க­மா­கவே இருந்­தது.

இந்­நி­லை­யில் திரை­கண்ட முதல் நாளன்றே 'பீஸ்ட்' படம் சுமார் 70 கோடி ரூபாயை உல­கெங்­கும் வசூல் செய்­துள்­ள­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இரண்­டாம் நாளன்று நூறு கோடி­யைக் கடந்­து­விட்ட நிலை­யில், நிச்­ச­ய­மாக இரு­நூறு கோடியை எட்­டிப்­பி­டிக்­கும் என்று ஆணித்­த­ர­மாக அடித்­துச் சொல்­கி­றார்­கள் விஜய் ரசி­கர்­கள். இதே வேகத்­தில் போனால், இரு­நூறு என்ற இலக்­கைக் கடந்து 'பீஸ்ட்' புதிய வசூல் சாதனை படைக்­கும் என்ற நம்­பிக்­கை­யும் விஜய் ரசி­கர்­க­ளி­டம் உள்­ளது.

இதற்­கி­டையே அஜித் ரசி­கர்­கள் என்ன செய்து கொண்­டி­ருப்­பார்­கள் என்­ப­து­தான் உங்­கள் கவலை என்­றால், அதை­யும் பார்த்து­வி­டு­வோம்.

'பீஸ்ட்' படத்­து­டன் கிட்­டத்­தட்ட இணைந்து வெளி­யீடு கண்­டுள்­ளது 'கேஜி­எஃப்'. இந்­தப் படத்­துக்­கும் உல­கெங்­கும் உள்ள இந்­திய சினிமா ரசிகர்­கள் மத்­தி­யில் வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

நடி­கர் யாஷ் நடிப்­பில், பிர­சாந்த் நீல் இயக்­கத்­தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளி­யா­னது 'கேஜி­எஃப்'. யாரும் எதிர்­பா­ராத வகை­யில் இந்­தப் படம் விமர்­சன, வசூல் ரீதி­யில் பெரிய வெற்­றி­யைப் பெற்­றது. இதை­யடுத்து 'கேஜி­எஃப்' இரண்­டாம் பாகத்தை எடுக்க இருப்­ப­தாக பிரசாந்த் நீல் அறி­வித்­தார்.

சூட்­டோடு சூடாக பட வேலை­களைத் தொடங்கி, கடந்த ஆண்டே வெளியிட இருந்தார். ஆனால் கொரோனா விவ­கா­ரத்­தால் இந்­தப் படத்­தின் வெளி­யீடும் ஒத்தி வைக்­கப்­பட்­டது. இந்­நி­லை­யில் ஏப்­ரல் 14ஆம் தேதி வெளி­யீடு கண்­டது 'கேஜி­எஃப் 2'. இந்த இரண்­டாம் பாகத்­துக்­கும் பலத்த எதிர்­பார்ப்பு நில­வி­ய­தால், உல­கெங்­கும் சுமார் பத்­தா­யி­ரத்­துக்­கும் அதி­க­மான திரை­களில் படத்தை வெளி­யிட்­டுள்­ள­னர்.

சரி... 'கேஜி­எஃப்' வசூல் நில­வ­ரம் எப்­ப­டி­யாம்?

இது தொடர்­பாக வெளி­யான தக­வல்­கள்­தான் அஜித் ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்தி உள்­ளது. கார­ணம், உலகம் முழு­வ­தும் முதல்­நா­ளன்றே சுமார் ரூ.150 கோடிக்­கும் மேல் வசூல் கண்­டுள்­ள­தாம் 'கேஜி­எஃப்'. தமி­ழ­கத்­தில் மட்­டும் ரூ. 7 கோடி­யும் கேர­ளா­வில் ரூ. 6 கோடி­யும் வசூல் செய்­துள்­ளது.

'பீஸ்ட்' படம் சென்­னை­யில் முதல் நாளன்று ரூ.2 கோடி வசூல் கண்ட நிலை­யில், அதை­யும் 'கேஜி­எஃப்' முறி­ய­டித்­து­விட்­ட­தாக கோடம்­பாக்­கத்து விவரப் புள்­ளி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

அதே­ச­ம­யம் இந்­திய அள­வில் திரை­யி­டும் எண்ணத்­து­டன் தயா­ரிக்­கப்­பட்ட படம் என்­ப­தால் 'கேஜி­எஃப்' படத்­தின் தயா­ரிப்­புச் செலவு அதி­கம் என்­றும் அதில் பிற மொழிக் கலை­ஞர்­கள் பங்­கேற்­றுள்­ள­தை­யும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

"விஜய் படத்­தில் தெலுங்கு நடி­கர் கார்த்­தி­கேயா மட்­டுமே உள்­ளார். 'கேஜி­எஃப்' படத்­தில் சஞ்­சய் தத் ரவீணா டாண்­டன், பிர­காஷ்­ராஜ் என்று பிற­மொழி நடி­கர்­கள், தொழில்­நுட்ப வல்­லு­நர்­கள் எனப் பலர் பணி­யாற்றி உள்­ள­னர். அத­னால் 'பீஸ்ட்' படத்­து­டன் ஒப்­பி­டு­வது சரி­யல்ல. "இரு படங்­க­ளுமே வசூல், விமர்­சன ரீதி­யில் எதை இலக்­கா­கக் கொண்டு தயா­ரிக்­கப்­பட்­ட­னவோ, அதை எட்­டும் வகை­யில் வர­வேற்பு பெற்­றுள்­ளன என்­ப­து­தான் சரி. எனவே இதில் இரு தரப்­புக்­குமே வெற்றி என்­று­தான் சொல்ல வேண்­டும். அது­தான் சரி," என்­கி­றார்­கள் திரை­யு­லக விவ­ரப் புள்­ளி­கள்.