சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்றது 'இரவின் நிழல்'

சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்றது 'இரவின் நிழல்'

1 mins read
ce751d24-4f0d-4695-a06b-a17cbe041cc1
'இரவின் நிழல்' படத்தில் பார்த்திபன். -

'இர­வின் நிழல்' திரைப்­ப­டம் இந்­திய, ஆசிய சாத­னைப் புத்­த­கங்­களில் இடம்­பெற்­றி­ருப்­பது மகிழ்ச்சி அளிப்­ப­தாக அதன் இயக்­கு­நர் பார்த்­தி­பன் தெரி­வித்­துள்­ளார்.

இது ஒரே 'ஷாட்'டில் எடுக்­கப்­பட்ட படம் என்ற சிறப்­புக்­கு­ரி­யது.

இதற்கு முன்­ன­தாக, பார்த்­தி­பன் இயக்­கிய 'ஒத்த செருப்பு' திரைப்­ப­ட­மும் ஆசிய சாத­னைப் புத்­த­கத்­தில் இடம்­பெற்­றது. அதில், தாமே கதை, திரைக்­கதை எழுதி, இயக்கி, தயா­ரித்து, நடிக்­க­வும் செய்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், ஏ.ஆர்.ரஹ்­மான் இசை­யில் உரு­வாகி வந்த 'இர­வின் நிழல்' படத்தை 'கான்' திரைப்­பட விழா­வில் திரை­யி­டு­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளார் பார்த்­தி­பன்.

ஐம்பது வயதான ஓர் ஆடவர், தனது கடந்த கால வாழ்க்கையின் பல்வேறு தருணங்களையும் சம்பவங்களையும் நினைத்துப் பார்ப்பதுதான் 'இரவின் நிழல்' படத்தின் கதையாம்.

இதில், அவருடன் வரலட்சுமி சரத்குமார், அனந்த கிருஷ்ணன், பிரிகிடா சகா ஆகியோர் நடித்துள்ளனர்.