'டாணாக்காரன்' படத்துக்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் விக்ரம் பிரபுவின் நடிப்பு அபாரம் என ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார்.
"அவரது பாராட்டை நான் எதிர்பார்க்கவே இல்லை. இப்படியொரு விஷயம் நடக்கும் என கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. பெரிய விருதுகளைவிட ரஜினி சாரின் பாராட்டு பெரியது. இதுபோன்ற பாராட்டுகள்தான் நம்மை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் செல்லும்," என்கிறார் விக்ரம் பிரபு.